51 நாட்கள் கோமாதா பூஜை பிரம்மரிஷி மலையில் இன்று தொடக்கம்

ஒவ்வொரு ஆண்டும் ஆவணி மாதம் உத்திராடம் நட்சத்திரத்தில், உலக மக்கள் நலன் கருதியும், மாதம் முறையாக மழை பொழியவும்,இயற்கை சீற்றங்களில் இருந்து மக்களை பாதுகாக்க வேண்டியும், ஆளுமையில் உள்ளவர்கள் சிறப்பாக ஆட்சி செய்யவும், அரசாங்கத்தில் லட்சுமி கடாக்ஷம் நிறைந்து தர்மவான்கள் நோயற்ற வாழ்வும்,;

Update: 2025-09-04 11:05 GMT
51 நாட்கள் கோமாதா பூஜை பிரம்மரிஷி மலையில் தொடங்கியது* பிரம்மரிஷி மலை பகவான் ஸ்ரீலஸ்ரீ காகபுஜண்டர் தலையாட்டி சித்தரின் அருளாசியுடனும், ஸ்ரீலஸ்ரீ புலிப்பாணி அன்னை சித்தர் ராஜகுமார் சுவாமிகளின் அருளாசியுடனும், தொடர்ந்து ஒவ்வொரு ஆண்டும் ஆவணி மாதம் உத்திராடம் நட்சத்திரத்தில், உலக மக்கள் நலன் கருதியும், மாதம் முறையாக மழை பொழியவும்,இயற்கை சீற்றங்களில் இருந்து மக்களை பாதுகாக்க வேண்டியும், ஆளுமையில் உள்ளவர்கள் சிறப்பாக ஆட்சி செய்யவும், அரசாங்கத்தில் லட்சுமி கடாக்ஷம் நிறைந்து தர்மவான்கள் நோயற்ற வாழ்வும், குறைவற்ற செல்வமும் பெற்று, அனைத்து விதமான தோஷங்கள் நீங்கி சகல ஐஸ்வர்யங்களும் பெற்று சீரும் சிறப்புமாக வாழ பிரம்மரிஷி மலை அடிவாரத்தில் தொடர் 51 நாட்கள் கோமாதா பூஜை 04.09.2025 அன்று தொடங்கப்பட்டது. இவ்விழாவில் மகா சித்தர்கள் அறக்கட்டளையின் இணை நிறுவனர் மாதாஜி ரோகிணி ராஜகுமார் தலைமையிலும், அறங்காவலர்கள் தவயோகி சுந்தரமகாலிங்கம் சுவாமிகள், தவயோகி தவசிநாதன் சுவாமிகள், வடலூர் தெய்வநிலையம் அறங்காவலர் குழு உறுப்பினர் திரு கிஷோர்குமார் முன்னிலையில் நடைபெற்றது. கோபூஜையில் எளம்பலூர், பெரம்பலூரை சேர்ந்த குழந்தைகள் மற்றும் பொது மக்கள் கலந்து கொண்டு சிறப்பித்தனர். விழாவில் கலந்து கொண்ட அனைவருக்கும் பிரசாதம் வழங்கப்பட்டது. விழா ஏற்பாட்டினை சிங்கப்பூர் குருகடாக்ஷம் மெய்யன்பர்கள், மாதாஜி ராதா சின்னசாமி, மேலாளர் பாலச்சந்திரன் மற்றும் மெய்யன்பர்கள் செய்தனர். இதை தொடர்ந்து பெரம்பலூர் புதிய பேருந்து நிலையம் பின்புறம் அமைந்துள்ள பிரம்மரிஷி ஸ்ரீலஸ்ரீ தலையாட்டி சித்தர் ஆசிரமத்திலும் காமராஜ் சுவாமிகள் தலைமையில் 51 நாட்கள் கோமாதா பூஜை தொடங்கியது.

Similar News