திருமணமான,6 மாதத்தில் பெண் மாயம்.

மதுரை மேலூர் அருகே திருமணமாகி 6 மாதமான பெண் மாயம் என புகார் அளிக்கப்பட்டுள்ளது.

Update: 2025-01-01 04:48 GMT
மதுரை மாவட்டம் மேலூர் அருகே திருவாதவூர் உலகு பிச்சான்பட்டி சேர்ந்த ஆனந்தி (19) என்பவருக்கு கடந்த ஆறு மாதத்திற்கு முன்பு மேலமடையச் சேர்ந்த கார்த்திக் என்பவருடன் திருமணம் நடந்துள்ளது. இவர்களுக்குள் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக கடந்த ஐந்து மாதமாக ஆனந்தி தனது தாயார் வீட்டார் உள்ளார் .இந்நிலையில் நேற்று முன்தினம் (டிச.30) இரவு 8 மணி அளவில் வீட்டை விட்டு வெளியே சென்றவர் மீண்டும் வீடு திரும்பவில்லை. ஆனந்தியை பல இடங்களில் தேடியும் கிடைக்கவில்லை என்பதால் தாயார் மேலூர் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். போலீசார் வழக்கு பதிவு செய்து காணாமல் போன பெண்ணை தேடி வருகிறார்கள்.

Similar News