6 பவுன் தங்க நகை திருடிய வழக்கில் 2 பேர் கைது
வேடசந்தூரில் 6 பவுன் தங்க நகை திருடிய வழக்கில் 2 பேர் கைது;

திண்டுக்கல் வேடசந்தூரில், திருட்டு வழக்கில் வேடசந்தூர் போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு மேற்படி சம்பவத்தில் ஈடுபட்ட மொட்டநாயக்கன்பட்டியை சேர்ந்த மேகநாதன்(35) என்பவரை கைது செய்து அவரிடம் தீவிர விசாரணை மேற்கொண்ட போது மேகநாதன் திருடிய நகைகளை வேடசந்தூரில் நகை பட்டதை வைத்திருக்கும் தியாகராஜன் என்பவரிடம் உருக்கியதாக கூறியதை தொடர்ந்து தியாகராஜனை வேடசந்தூர் போலீசார் கைது செய்து உருக்கிய நகைகளை மீட்டு விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.