நிலம் தருவதாக கூறி 6 லட்சம் மோசடி - பெண்ணுக்கு போலீஸ் வலை
திங்கள்சந்தை அருகே நிலம் தருவதாக கூறி 6 லட்சம் மோசடி செய்த பெண்ணை போலீசார் வலைவீசி தேடிவருகின்றனர்.
By : King 24x7 Angel
Update: 2024-03-25 11:03 GMT
கன்னியாகுமரி மாவட்டம் திங்கள் சந்தை அருகே தச்சன்பரம்பு பகுதியை சேர்ந்தவர் மணி என்பவர் மனைவி ரகுமதி (63). இவரிடம் கடந்த 2018 ஆம் ஆண்டு திங்கள் நகர் சுப்பிரமணியன் புது தெருவை சேர்ந்த கிரிஷ்குமார் மனைவி பிரமிளா குமாரி என்ற லல்லி (53)என்பவர் நிலம் விற்பனைக்கு உள்ளதாக கூறியுள்ளார். அப்போது 12 சென்ட் இடம் இருப்பதாகவும் அதை மூன்று பங்காக பிரித்து ஒரு பங்கு தருவதாகவும் கூறியுள்ளார். இதை நம்பி ரகுமதி சென்ட் ஒன்றுக்கு ஒன்றரை லட்சம் விலை பேசி முதலில் அட்வான்ஸ் 50 ஆயிரமும், பின்னர் மீதி தொகை 5 லட்சத்து 50 ஆயிரம் என மொத்தம் ஆறு லட்சம் கொடுத்துள்ளார். இது குறித்து பிரமிளா குமாரி பணம் பெற்றதாக முத்திரைத்தாளில் எழுதியும் கொடுத்துள்ளார். ஆனால் இதுவரை நிலத்தை எழுதிக் கொடுக்கவில்லை என தெரிகிறது. இது குறித்து ரகுமதி இரணியல் போலீஸ் நிலையத்தில் புகார் செய்தார். போலீசார் பிரமிளா குமாரி மீது மோசடி வழக்கு பதிவு செய்தனர். இந்த தகவல் அறிந்ததும் அவர் தலைமறைவாகிவிட்டார். தற்போது போலீசார் தலைமறைவான வரை தேடி வருகின்றனர்.