பொங்கலூர் அருகே நகைப்பறிப்பில் ஈடுபட்ட பெண் உட்பட 6 பேர் கைது

பொங்கலூர் அருகே பெண்ணின் 9 பவுன் நகையை பறித்து சென்ற பெண் உட்பட 6 பேரை போலீசார் கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Update: 2024-06-28 06:54 GMT

கைது செய்யப்பட்டவர்கள் 

பொங்கலூர் அருகே உள்ள உகாயனூர் ஊராட்சி குருநாதபாளையத்தை சேர்ந்த செல்வராஜ் மனைவி தனலட்சுமி  (52). இவர் கடந்த 22- ந் தேதி வீட்டிலிருந்து தோட்டத்திற்கு நடந்து சென்றார். அப்போது அந்த வழியாக அங்கு மோட்டார் சைக்கிளில் வந்த 2 மர்ம ஆசாமிகள் அவரை திடீரென கீழே தள்ளிவிட்டுள்ளனர். பின்னர் அவர் கழுத்தில் அணிந்திருந்த 5 பவுன் சங்கிலி மற்றும் வளையல், மோதிரம் என மொத்தம் 9 பவுன் நகைகளை பறித்துக் கொண்டு தப்பிச்சென்றனர்.

இது குறித்து அவினாசிபாளையம் போலீசார் வழக்குப்பதிவு செய்து தனிப்படை அமைத்து மர்ம ஆசாமிகளை தேடி வந்தனர். இந்த நிலையில்  அவினாசிபாளையம் சுங்கம் பகுதியில் போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது அந்த வழியாக வந்த 6 பேரை பிடித்து போலீசார் விசாரணை மேற்கொண்டனர். விசாரணையில் அவர்கள் நாகப்பட்டினம் மாவட்டம், தலையநல்லூரைச் சேர்ந்த ஆனந்த் (42), அமிர்த ரூபன் (28), ரமேஷ் என்ற கட்டை ரமேஷ் (40), மணிமாறன் (30), சுரேந்திரன் (31), மன்னார்குடியைச் சேர்ந்த சரிதா (40) என்பதும், குருநாதம்பாளையத்தில் தனலட்சுமியிடம் நகையை பறித்து சென்றவர்கள் என்றும் தெரியவந்தது. இதையடுத்து போலீசார் அவர்களை கைது செய்து அவர்களிடம் இருந்து 9 பவுன் நகை மற்றும் 2 இரு சக்கர வாகனங்களையும் பறிமுதல் செய்தனர்.

Tags:    

Similar News