போதை மாத்திரை கஞ்சாவுடன் சிறுவர்கள் உட்பட 6 பேர் கைது

சுசீந்திரம் அருகே போதை மாத்திரை, போதை ஊசி, கஞ்சாவுடன் சுற்றி திரிந்த சிறுவர்கள் உட்பட 6 பேரை போலீசார் கைது செய்தனர்.

Update: 2024-06-28 06:30 GMT
பைல் படம்
கன்னியாகுமரி மாவட்டம் சுசீந்திரம் பகுதியில் போலீஸ் சார் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர். குலசேகரன் புதூர் பகுதியில்  அங்கு சந்தேகத்துக்கிடமாக  கும்பலாக  சுற்றித்திரிந்த ஆறு பேரை பிடித்து போலீசார்  விசாரணை செய்தனர். இதில் அவர்கள் தெங்கம்புதூர் அருகே உள்ள சாந்தி நகரை சேர்ந்த முகமது ஷெரில் (20 ) தினேஷ் (20 ) அபிஷேக் (19),தனேஷ் (20 ) மற்றும் இந்திரா நகரை சேர்ந்த 17 வயது சிறுவன், காந்தி நகரை சேர்ந்த 18 வயது சிறுவன் என்பது தெரிய வந்தது. மேலும் அவர்களிடமிருந்த பையை சோதனை இட்டபோது அதில் 100 கிராம் கஞ்சா பொட்டலம், 87 போதை மாத்திரைகள், ஒரு போதை ஊசி இருந்தது கண்டு பிடிக்கப்பட்டது. உடனடியாக அனைத்தையும் பறிமுதல் செய்த போலீசார் 6 பேரை கைது செய்து சுசீந்திரம் போலீஸ் நிலையத்தில் அழைத்து விசாரணை நடத்தினர்.
Tags:    

Similar News