பள்ளத்தில் பாய்ந்த கார் 6 பேர் உயிர் தப்பினர் 

செண்பகராமன் புதூர் அருகே பள்ளத்தில் கார் ஒன்று பாய்ந்த விபத்தில் காரில் இருந்த 6 பேரும் உயிர் தப்பினர்.;

Update: 2024-06-22 12:16 GMT

செண்பகராமன் புதூர் அருகே பள்ளத்தில் கார் ஒன்று பாய்ந்த விபத்தில் காரில் இருந்த 6 பேரும் உயிர் தப்பினர்.


நெல்லை மாவட்டம் கல்லிடைக்குறிச்சி பகுதியை சேர்ந்தவர் ஸ்டீபன் சாமுவேல். தனது தந்தை ஏசுதாசனுக்கு குலசேகரம் பகுதியில் உள்ள ஒரு மருத்துவ கல்லூரி ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெறுவதற்காக சொகுசு காரில் குமரி மாவட்டம் வந்து கொண்டிருந்தார்.     அவருடன் தாய் வசந்தா, மனைவி ரெபேக்கா,  இரண்டு குழந்தைகள் ஆகியோரும் இருந்தனர். 

குமரி மாவட்டம் ஆரல்வாய்மொழி -  செண்பகராமன் புதூர்  சாலையில் கார் வந்து கொண்டிருந்தபோது, மரப்பாலம் அருகே உள்ள  மாவட்ட டாஸ்மாக் அலுவலகம் செல்லும் பகுதியில் திடீரென கார் கட்டுப்பாட்டு இழந்து வலது புறமாக பள்ளத்தில் புகுந்தது.  இதனால் காரில் இருந்தவர்கள் அதிர்ச்சி அடைந்து சத்தம் போட்டனர்.      

Advertisement

இவர்களது சத்தத்தை கேட்டு அக்கம் பக்கத்தினர் ஓடி வந்தனர். இந்த தகவல் அறிந்து ஊராட்சி மன்ற தலைவர் கல்யாண சுந்தரம் உள்ளிட்டவர் சம்பவ இடத்திற்கு சென்று பொதுமக்கள்  உதவியுடன் காரின் உள்ளே சிக்கி இருந்த ஆறு பேரையும்  மீட்டனர்.      அதைத்தொடர்ந்து முதல் உதவி சிகிச்சைக்காக செண்பகராமன் புதூர்  அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இந்த விபத்தில் சிறுசிறு காயங்களுடன் அனைவரும் உயிர் பிழைத்தனர். தொடர்ந்து கார் ஜேசிபி எந்திரம் மூலம் மீட்க்கப்பட்டது.

Tags:    

Similar News