வானில் ஒரே நேர்கோட்டில் 6 கோள்கள் : பார்த்து ரசித்த மக்கள்!

வானில் 6 கோள்கள் அணிவகுத்து நிற்கும் அதிசய நிகழ்வை தூத்துக்குடி கடற்கரையில் டெலஸ்கோப் மூலம் பொதுமக்கள் பார்வையிட்டனர்.

Update: 2024-06-05 02:44 GMT

டெலஸ்கோப் மூலம் பார்வையிடல் 

ஜூன் 3, 4, 5 ஆகிய தேதிகளில் அதிகாலை முதல் கீழ் திசை வானில் ஒரே நேர் கோட்டில் வியாழன், புதன், பூரேனேஸ், சனி, செவ்வாய், நெப்டியூன், ஆகிய 6 கோள்கள் அணிவகுத்து நின்றன.அணிவகுத்து என்ற கோள்களை பொதுமக்கள் நேரில் பார்க்கலாம், இக்கோள்களை டெலஸ்கோப்மூலம் பார்வையிட மாநிலம் முழுவதும் பல்வேறு இடங்களில் தமிழ்நாடு அஸ்ட்ரானமி சயின்ஸ் சொசைட்டி சிறப்பான ஏற்பாடுகள் செய்திருந்தது. இதனை பொதுமக்கள் கண்டு வியந்தனர்.

தூத்துக்குடி கடற்கரையில் நடந்த நிகழ்ச்சியில் ஏராளமான பொதுமக்கள் அணிவகுத்து நின்ற கோள்களை பார்வையிட்டனர். தமிழ்நாடு அஸ்ட்ரானமி சயின்ஸ் சொசைட்டி மாநில செயற்குழு உறுப்பினர் முத்துசாமி, தூத்துக்குடி அஸ்ட்ரோ கிளப் மாவட்ட ஒருங்கிணைப்பாளர் சம்பத் சாமுவேல் ஆகியோர் அணிவகுத்து நின்ற 6 கோள்களை பார்வையிட பயிற்சி அளித்தனர். அனைவருக்கும் கோள்கள் திருவிழா விழிப்புணர்வு அட்டைகள் வழங்கப்பட்டது. இதில் மருத்துவக் கல்லூரி மாணவர்கள் ரங்கநாதன், கோபிநாத், தூத்துக்குடி அஸ்ட்ரோ கிளப் நிர்வாகிகள் ஜெயபால், கல்யாணசுந்தரம், ராஜ்குமார், உள்பட பலர் கலந்து கொண்டனர்.

Tags:    

Similar News