மூதாட்டியிடம் நகை பறித்த வாலிபருக்கு 6 ஆண்டு சிறை!

பல்லடத்தில் நகை பறித்த வாலிபருக்கு 6 ஆண்டு சிறை தண்டனை விதித்து பல்லடம் கோட்டு தீர்ப்பு வழங்கியுள்ளது.;

Update: 2024-06-06 13:34 GMT
மூதாட்டியிடம் நகை பறித்த வாலிபருக்கு 6 ஆண்டு சிறை!

பல்லடத்தில் நகை பறித்த வாலிபருக்கு 6 ஆண்டு சிறை தண்டனை விதித்து பல்லடம் கோட்டு தீர்ப்பு வழங்கியுள்ளது.


  • whatsapp icon

மூதாட்டியிடம் நகை பறித்த வாலிபருக்கு 6 ஆண்டு சிறை. பல்லடம் கோர்ட் தீர்ப்பு! பல்லடம் அருகே உள்ள ரோட்டரி அவன்யூ பகுதியை சேர்ந்த மூதாட்டி சுப்பாத்தாளிடம் கடந்த 2022 ஆம் ஆண்டு 41/2 பவுன் நகையை வாலிபர் ஒருவர் பறித்து சென்றார். இது குறித்து பல்லடம் போலீசார் வழக்கு பதிவு செய்து கரூர் மாவட்டம் அரவக்குறிச்சியை சேர்ந்த செல்லத்துரை என்கிற அன்பு செல்வம் (வயது 37) என்பவரை கைது செய்து சிறையில் அடைத்தனர்.

இவர் மீதான வழக்கு பல்லடம் குற்றவியல் நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது.இந்த வழக்கில் நேற்று தீர்ப்பு கூறப்பட்டது. அந்த தீர்ப்பில் குற்றம்சாட்டப்பட்ட செல்லத்துரை என்கிற அன்பு செல்வதற்கு ஆறு ஆண்டு சிறை தண்டனையும் ரூ. 10 ஆயிரம் அபராதமும் விதித்து நீதிபதி தீர்ப்பளித்தார். செல்லத்துரை மீது கரூர் திருப்பூர் உள்ளிட்ட பல்வேறு போலீஸ் நிலையங்களில் 30க்கும் மேற்பட்ட வழக்குகள் உள்ளதாக போலீசார் தெரிவித்தனர்..

Tags:    

Similar News