சீர்காழியில் திருடு போன 65பவுன் நகை 4நாட்களில் மீட்பு
சீர்காழியில் மளிகை கடை உரிமையாளர் வீட்டில் 65 பவுன் நகை மற்றும் கிலோ வெள்ளி பொருட்களை திருடிய மூன்று பேர் கைது செய்யப்பட்டனர்.
மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி இரணியன் நகரை சேர்ந்த சேகர்.53. இவர் அரசு மருத்துவமனை சாலையில் மளிகை கடை வைத்து நடத்தி வருகிறார். சேகர் வீட்டில் கடந்த 10 தேதி கடைக்கு வந்து விட்ட நிலையில் அவரது மனைவி ரேணுகா வீட்டில் சமையலை முடித்துவிட்டு மதியம் 12:30 மணிக்கு கடைக்கு வந்துள்ளார்.அதனை தொடர்ந்து சேகர் சாப்பிடுவதற்காக வீட்டிற்கு சென்றுள்ளார்.
அப்போது கேட் உடைக்கப்பட்டு, கதவு கள்ள சாவி கொண்டு திறந்து கிடந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்தார். தொடர்ந்து வீட்டினுள் சென்று பார்த்தபோது பூஜை ரூமில் இருந்த 65 பவுன் நகைகள் மற்றும் ஒரு கிலோ வெள்ளி பொருட்களை மர்ம நபர்கள் திருடி சென்றது தெரியவந்தது.
இது குறித்த புகாரின் பேரில் சீர்காழி போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து பார்வையிட்டு, அருகில் உள்ள சிசிடிவி கேமரா பதிவுகளை கைப்பற்றி நகை மற்றும் வெள்ளிப் பொருள்களை திருடி சென்ற மர்ம நபர்கள் குறித்து சீர்காழி போலீசார் வழக்குபதிவு செய்து ஆய்வாளர் சிவகுமார் தலைமையில் போலீசார் புதிய பேருந்து நிலையம் அருகே வாகன தனிக்கையில் ஈடுப்பட்ட போது அப்போது அவ்வழியாக நடந்து வந்த நபரை பிடித்து விசாரணை செய்த போது முன்னுக்கு பின் முரணாக பதில் அளித்த நபரை பிடித்து வந்து காவல்நிலையத்தில் வைத்து விசாரணை செய்ததில் சீர்காழி அருகே தில்லைவிடங்கன் கிராமத்தை சேர்ந்த ஜெயராஜ் (35),ராதாநல்லூரை சேர்ந்த சுபாஷ்(30),நிம்மேலி புதுப்பேட்டையை சேர்ந்த அருண்குமார் ஆகிய 3 பேரும் சேர்ந்து 65 சவரன் நகை,1 கிலோ வெள்ளி பொருட்களை திருடி உப்பனாறு ஆற்று கரையோரம் நகைகளை குழி தோண்டி புதைத்து வைத்திருப்பதாக தெரிவித்தன் பேரில் போலீசார் 65' பவுன் நகைகள் மற்றும் வெள்ளி பொருட்களை பறிமுதல் செய்தனர் இதுகுறித்து சீர்காழி போலீசார் வழக்குபதிவு செய்து 3பேரையும் கைது செய்து நகைகளை மீட்டனர்