தஞ்சாவூர் நாடாளுமன்றத் தேர்தலில் 68.27%வாக்குப்பதிவு

தஞ்சாவூர் நாடாளுமன்றத் தேர்தலில் 68.27% வாக்குப்பதிவனது

Update: 2024-04-21 16:41 GMT

வாக்குப்பதிவு இயந்திரங்கள்

தஞ்சாவூர் நாடாளுமன்ற தொகுதிக்குட்பட்ட மன்னார்குடி சட்டமன்றத் தொகுதியில், மொத்த வாக்காளர்கள் எண்ணிக்கை 2 லட்சத்து 53 ஆயிரத்து 630 ஆகும். (இதில் ஆண்கள் 1 லட்சத்து 22 ஆயிரத்து 630, பெண்கள் 1 லட்சத்து 30 ஆயிரத்து 992, இதரர் - 8), இதில் நடைபெற்ற முடிந்த நாடாளுமன்றத் தேர்தலில்,

1 லட்சத்து 71 ஆயிரத்து 533 பேர் வாக்களித்துள்ளனர் (இதில் ஆண்கள் 79 ஆயிரத்து 903, பெண்கள் 91 ஆயிரத்து 629, இதரர் -1) மன்னார்குடி தொகுதியில் மொத்தம் 67.63 விழுக்காடு வாக்குப் பதிவு ஆனது. திருவையாறு சட்டமன்றத் தொகுதியில் மொத்த வாக்காளர்கள் எண்ணிக்கை 2 லட்சத்து 68 ஆயிரத்து 207 ஆகும். (இதில் ஆண்கள் 1 லட்சத்து 30 ஆயிரத்து 913, பெண்கள் 1 லட்சத்து 37 ஆயிரத்து 277, இதரர்-17) இதில் நடைபெற்று முடிந்த நாடாளுமன்றத் தேர்தலில், 1 லட்சத்து 93 ஆயிரத்து 504 பேர் வாக்களித்துள்ளனர். (இதில் ஆண்கள் 95 ஆயிரத்து 765, பெண்கள் 97 ஆயிரத்து 736, இதரர் - 3) திருவையாறு தொகுதியில் 72.15 விழுக்காடு வாக்குப்பதிவானது.

தஞ்சாவூர் சட்டமன்றத் தொகுதியில் மொத்த வாக்காளர்கள் எண்ணிக்கை 2 லட்சத்து 75 ஆயிரத்து 230 ஆகும். (இதில் ஆண்கள் 1 லட்சத்து 31 ஆயிரத்து 582, பெண்கள் 1 லட்சத்து 43 ஆயிரத்து 583, இதரர் - 65). இதில் நடைபெற்று முடிந்த நாடாளுமன்றத் தேர்தலில் 1 லட்சத்து 70 ஆயிரத்து 887 பேர் வாக்களித்துள்ளனர். (இதில், ஆண்கள் 82 ஆயிரத்து 918, பெண்கள் 87 ஆயிரத்து 947, இதரர் 22) தஞ்சாவூர் தொகுதியில் 62.09 விழுக்காடு வாக்குப்பதிவானது. ஒரத்தநாடு சட்டமன்றத் தொகுதியில் மொத்த வாக்காளர் எண்ணிக்கை 2 லட்சத்து 45 ஆயிரத்து 901 ஆகும்.

(இதில் 1லட்சத்து 19 ஆயிரத்து 413 ஆண்கள், 1 லட்சத்து 26 ஆயிரத்து 485 பெண்கள், இதரர் 3 பேர்) இதில், நடைபெற்ற முடிந்த நாடாளுமன்றத் தேர்தலில் வாக்களித்தவர்கள் 1 லட்சத்து 69 ஆயிரத்து 428 பேர். (இதில் ஆண்கள் 78 ஆயிரத்து 824 பேர், பெண்கள் 90 ஆயிரத்து 603 பேர், இதரர் ஒருவர்). ஒரத்தநாடு தொகுதியில் 68.90 விழுக்காடு வாக்கு பதிவானது. பட்டுக்கோட்டை சட்டமன்றத் தொகுதியில், மொத்த வாக்காளர்கள் எண்ணிக்கை 2 லட்சத்து 43 ஆயிரத்து 843 ஆகும். (இதில் ஆண்கள் 1 லட்சத்து 16 ஆயிரத்து 925 பேர், பெண்கள் 1 லட்சத்து 26 ஆயிரத்து 893, இதரர்-25). இதில் நடைபெற்ற முடிந்த நாடாளுமன்றத் தேர்தலில் வாக்களித்தவர்கள் 1 லட்சத்து 64 ஆயிரத்து 147 பேர். (இதில் ஆண்கள் 72 ஆயிரத்து 929 பேர், பெண்கள் 91 ஆயிரத்து 210 பேர். இதரர் 8 பேர்). பட்டுக்கோட்டை சட்டமன்றத் தொகுதியில் 67.32 விழுக்காடு வாக்குகள் பதிவானது.

பேராவூரணி சட்டமன்ற தொகுதியில் மொத்த வாக்காளர்கள் எண்ணிக்கை 2 லட்சத்து 14 ஆயிரத்து 415 பேர். (இதில், ஆண்கள் 1 லட்சத்து 5 ஆயிரத்து 703 பேர், பெண்கள் 1 லட்சத்து 8 ஆயிரத்து 702 பேர், இதரர்- 10 பேர்), நடைபெற்று முடிந்த நாடாளுமன்றத் தேர்தலில் வாக்களித்தது 1 லட்சத்து 55  ஆயிரத்து 450 பேர் (இதில் ஆண்கள் 71 ஆயிரத்து 796 பேர், பெண்கள் 83 ஆயிரத்து 653 பேர், இதரர்-1) பேராவூரணி சட்டமன்ற தொகுதியில் 72. 50 விழுக்காடு வாக்கு பதிவானது.  தஞ்சை நாடாளுமன்ற தொகுதியில் மொத்த வாக்கு எண்ணிக்கை 15 லட்சத்து ஆயிரத்து 226 பேர் (இதில் ஆண்கள் 72 லட்சத்து 7 ஆயிரத்து 166 பேர், பெண்கள் 7 லட்சத்து 73 ஆயிரத்து 932 பேர், இதரர் 128 பேர்), நடைபெற்று முடிந்த நாடாளுமன்றத் தேர்தலில் 10 லட்சத்து 24 ஆயிரத்து 949 பேர் வாக்களித்துள்ளனர்.

(இதில் ஆண்கள் 4 லட்சத்து 82 ஆயிரத்து 135 பேர். பெண்கள் 5 லட்சத்து 42 ஆயிரத்து 778 பேர். இதரர் 36 பேர்) தஞ்சாவூர் நாடாளுமன்ற தொகுதியில் மொத்தம் 68.27 விழுக்காடு வாக்குப்பதிவானது.

Tags:    

Similar News