இரும்பூதிபட்டி சந்தையில் 7 கிலோ ஆடு 6,500 க்கு விற்பனை
கரூர் மாவட்டம், இரும்பூதிபட்டி ஆட்டு சந்தையில் 7 கிலோ ஆடு 6,500 க்கு விற்பனையானது.
கரூர் மாவட்டம், கிருஷ்ணராயபுரம் அடுத்த சிவாயம் ஊராட்சி மற்றும் இரும்பூதிபட்டி, சந்தையூர் வார சந்தை வாரம் தோறும் சனிக்கிழமைகளில் நடைபெறுவது வழக்கம். இந்த வார சந்தை காலை 4 மணி முதல் காலை 10 மணி வரை செயல்படும். இந்த சந்தையில் காய்கறிகள், ஆடுகள், நாட்டு கோழிகள் விற்பனை நடைபெறும். இந்த வார சந்தையில் சுற்றுவட்டார பகுதியில் இருந்து கிராம மக்கள், தாங்கள் வளர்க்கும் ஆடு, நாட்டுக்கோழிகளை விற்பனை செய்வதற்கு வார சந்தைக்கு கொண்டு வருகின்றனர்.
நேற்று கூடிய சந்தையில் 7 கிலோ கொண்ட ஆடு ரூபாய் 6,500- க்கு விற்பனையானது. அதேபோல நாட்டுக்கோழி கிலோ 400 ரூபாய்க்கு விற்பனை ஆனது. இந்த சந்தையில் சுற்றுவட்டார பகுதியான லாலாபேட்டை, பஞ்சப்பட்டி, குளித்தலை, தோகைமலை, கரூர், சேங்கல் ஆகிய சுற்றுவட்டார பகுதிகளில் இருந்து வந்த வியாபாரிகள், ஆடு மற்றும் கோழிகளை வாங்கி வியாபாரத்திற்காக கொண்டு சென்றனர்.