7.5 சதவீதம் இடஒதுக்கீட்டில் வாய்ப்பு பெற்ற மருத்துவ மாணவர்கள்

எடப்பாடி பழனிசாமியிடம் மருத்துவ மாணவர்கள் வாழ்த்து;

Update: 2025-08-12 04:08 GMT
நீட் தேர்வு முடிவுகளின் அடிப்படையில் அரசு பள்ளிகளில் படித்து 7.5 சதவீதம் இடஒதுக்கீட்டில் ஏராளமான மாணவ, மாணவிகள் மருத்துவ படிப்புக்கு தேர்வாகி உள்ளனர். அதன்படி எடப்பாடி சட்டசபை தொகுதியில் உள்ள அரசு பள்ளிகளில் படித்து 7.5 சதவீதம் உள் இடஒதுக்கீடு மூலம் மருத்துவம் மற்றும் பல் மருத்துவம் படிப்பதற்கு வாய்ப்பு பெற்ற மாணவ, மாணவிகளான திவ்யதர்ஷினி, அக்சயா, சவிதா, மஞ்சுளா, கோகிலா, சுதர்சன், ஹரிப்பிரியன் மற்றும் பிரசன்னகுமார் ஆகிய 8 பேர் நேற்று சேலம் நெடுஞ்சாலை நகரில் உள்ள வீட்டில் அ.தி.மு.க. பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமியை நேரில் சந்தித்து வாழ்த்து பெற்றனர். அப்போது அவர்கள் 7.5 சதவீதம் உள் இடஒதுக்கீடு மூலம் மருத்துவ கனவை நனவாக்கி கொடுத்ததற்காக நன்றியை தெரிவித்து கொண்டனர். இதைத்தொடர்ந்து அனைவரும் டாக்டராகி ஏழை, எளிய மக்களுக்கு மருத்துவ சேவை புரிய வேண்டும் என எடப்பாடி பழனிசாமி கேட்டு கொண்டார்.

Similar News