அலைடு ஹெல்த் சயின்ஸ் துறை சார்பில் 75 அடி உயர 'லோகோ’
அலைடு ஹெல்த் சயின்ஸ் துறை சார்பில் குடியரசு தினத்தையொட்டி 75 அடி உயர லோகோ’;
By : King 24X7 News (B)
Update: 2024-01-28 15:00 GMT
அசோக் சின்னம்
சேலம் விநாயகா மிஷனின் விம்ஸ் மருத்துவமனை வளாகத்தில் உள்ள அலைடு ஹெல்த் சயின்ஸ் துறையின் நாட்டு நலப்பணித்திட்டத்தின் மூலம் குடியரசு தின விழா கொண்டாடப்பட்டது. இதில் பல்கலைக்கழகத்தின் வேந்தர் கணேசனின் வழிகாட்டுதலின்படி 75 அடி உயர தேசிய இலட்சினை லோகோ வரையப்பட்டது.
துறையின் டீன் டாக்டர் செந்தில்குமார் தலைமையில் நடத்தப்பட்ட இந்த 75 அடி உயர தேசிய இலச்சினை வடிவமைப்பில் துறையை சேர்ந்த மாணவ, மாணவிகள், பேராசிரியர்கள் என அனைவரும் பங்கேற்றனர்.
இதற்கான ஏற்பாடுகளை துறையின் நாட்டு நல பணித்திட்ட ஒருங்கிணைப்பாளர் தனசேகர் மற்றும் நுண்கலை அமைப்பின் ஆலோசகர் உமா மகேஸ்வரி ஆகியோர் செய்திருந்தனர்.