காஞ்சிபுரம் மாவட்டத்தில்75 சதவீதம் பேருக்கு வழங்கப்பட்ட பொங்கல் பரிசு

காஞ்சிபுரம் மாவட்டத்தில் பொங்கல் பரிசு தொகுப்பு பெறாதவர்களுக்கு நாளை மற்றும் நாளை மறுநாள் வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Update: 2024-01-17 07:02 GMT

பரிசு தொகுப்பு 

தமிழகத்தில் உள்ள அனைத்து குடும்ப அட்டைதாரர்களுக்கும் பொங்கல் பரிசு தொகுப்பாக ரூபாய் ஆயிரம், ஒரு கிலோ பச்சரிசி , சக்கரை மற்றும் கரும்பு உள்ளிட்டவை நியாய விலை கடைகள் மூலம் கடந்த பத்தாம் தேதி முதல் வழங்கப்பட்டு வருகிறது.அவ்வகையில் காஞ்சிபுரம் மாவட்டத்தில் 3 லட்சத்து 96 ஆயிரத்து 752 அட்டைதாரர்களுக்கு பொங்கல் பரிசு வழங்கப்படுவதாக கூறி இதனை அமைச்சர் அன்பரசன் தொடங்கி வைத்தார்.

இந்நிலையில் கடந்த இரண்டு நாட்களில் 60% குடும்ப அட்டைதாரர்களுக்கு பொங்கல் பரிசு தொகை நேற்று வழங்கப்பட்டுள்ளதாகவும் சுமார் ஒரு லட்சத்து 74 ஆயிரத்து 822 நபர்கள் இதனை பெற்றுள்ளதாகவும் தற்போது மூன்றாவது நாளாக இன்று அனைத்து நியாய விலை கடைகளிலும் வழங்கப்படுகிறது என மாவட்ட நிர்வாகம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. மூன்றாவது நாளாக வழங்கப்பட்டு வரும் பொங்கல் பரிசு தொகையினை பெற பொதுமக்கள் வரிசையில் இன்று டோக்கன்களை ஊழியர்களிடம் அளித்து பரிசுத்தொகையை பெற்று வருகின்றனர்.

மாலை 4 மணி வரை 75% குடும்ப அட்டைதாரர்களுக்கு பொங்கல் பரிசு வழங்கப்பட்டதாக மாவட்ட வழங்கல் அலுவலர் தெரிவித்தார். டோக்கன் வழங்கப்படாத நபர்களுக்கு 16ஆம் தேதி முதல் வழங்கப்படும் எனவும் தெரிய வருகிறது.நாளை மற்றும் மறுநாள் என மேலும் இரண்டு நாட்களுக்கு பரிசு பொங்கல் தொகை வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

Tags:    

Similar News