76- புகார்தாரர்களுக்கு இல்லம் தேடி முதல் தகவல் அறிக்கை வழங்கப்பட்டுள்ளது.

76- புகார்தாரர்களுக்கு இல்லம் தேடி முதல் தகவல் அறிக்கை வழங்கப்பட்டுள்ளது.;

Update: 2025-07-29 10:18 GMT
76- புகார்தாரர்களுக்கு இல்லம் தேடி முதல் தகவல் அறிக்கை வழங்கப்பட்டுள்ளது. கரூர் மாவட்டத்தில் 18 சட்டம் & ஒழுங்கு காவல் நிலையங்களும், 03 அனைத்து மகளிர் காவல் நிலையங்கள், மாவட்ட குற்றப்பிரிவு மற்றும் சைபர் கிரைம் காவல் நிலையங்களும் இயங்கி வருகின்றன. இந்த காவல் நிலையங்களில் பதிவு செய்யப்படும் வழக்குகளின் முதல் தகவல் அறிக்கைகளை புகார்தாரர்களுக்கு சம்மந்தப்பட்ட காவல் நிலையங்களிலிருந்து காவல் துறையினரால் நேரடியாக அவர்களுடைய இல்லங்களுக்கே தேடிச்சென்று வழங்கப்பட்டுவருகிறது. இந்த நடைமுறை கடந்த 21.07.25-ம் தேதி முதல் செயல்படுத்தப்பட்டு இதுவரை 76 முதல் தகவல் அறிக்கைகள் வழங்கப்பட்டுள்ளது. காவல் நிலையங்களில் பதியப்படும் வழக்குகளின் முதல் தகவல் அறிக்கையை (FIR) புகார்தாரர்களின் சிரமத்தை தவிர்க்க அவர்களின் இல்லம் தேடி சென்று வழங்கப்படுவது பொதுமக்களுக்கு காவல்துறையின் மீது நம்பிக்கை மற்றும் நெருக்கமான தொடர்பை ஏற்படுத்தியுள்ளதோடு, பொதுமக்கள் மத்தியில் மிகுந்த வரவேற்பையும் பெற்றுள்ளது. கரூர் மாவட்ட காவல்துறையின் இத்தகைய மக்கள் நேய நடவடிக்கைகள் ஒரு முன்மாதிரியாக இருப்பதோடு பொதுமக்களின் நம்பிக்கையை வெகுவாக பெற்றுள்ளதாக மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் தெரிவித்தனர்.

Similar News