ஜெயங்கொண்டம் மக்கள் நீதிமன்றத்தில் 768 வழக்குகளுக்கு தீர்வு
ஜெயங்கொண்டம் மக்கள் நீதிமன்றத்தில் 768 வழக்குகளில் ரூ.1.33 கோடிக்கு தீர்வு எட்டப்பட்டது.
புதுடெல்லி தேசிய மக்கள் நீதிமன்றம் உத்தரவின்படி தமிழ்நாடு மாநில சட்டப் பணிகள் ஆணைக் குழுவின் தலைவர் மற்றும் மாவட்ட நீதிபதி கிறிஸ்டோபர் வழிகாட்டுதலின் படியும் ஆலோசனைப்படி ஜெயங்கொண்டம் வட்ட சட்டப்பணிகள் குழுவின் தலைவரும் சார்பு நீதிபதியும் ஆகிய முனைவர் லதா தலைமையில் ஜெயங்கொண்டம் சார்பு நீதிமன்றத்தில், மக்கள் நீதிமன்றம் நடைபெற்றது. அதில் சார்பு நீதிபதி டாக்டர் லதா மேற்பார்வையில் ஜெயங்கொண்டம் சிறப்பு நீதிபதி .செல்வகுமார், கூடுதல் மாவட்ட நீதிபதி கணேஷ் ஒரு அமர்விலும், குற்றவியல் நீதித்துறை நடுவர் இராஜசேகரன் மற்றொரு அமர்வில் அமர்ந்து நீதிமன்றத்தில் நிலுவையில் இருந்த வழக்குகளை விசாரணைக்கு எடுத்து சமரசம் பேசப்பட்டது.
சுமார் 650 வழக்குகளுக்கு மேல் கோப்பிற்கு எடுக்கப்பட்டு அதில் 409 வழக்குகள் சமரசமாக பேசி முடிக்கப்பட்டது. மற்றும் வங்கி வாராக் கடன்கள் 84 வழக்குகள் 71 லட்சத்து73 ஆயிரம் ரூபாய்க்கு முடிக்கப்பட்டது. சமரச தீர்வு நில ஆர்ஜித (LAOP )வழக்குகள் வங்கி வாரா கடன்கள் உட்பட மொத்த வழக்குகள் 768 வழக்குகள் தொகையாக ரூ1 கோடியே33 லட்சத்து 51 ஆயிரத்து 330க்கு தீர்வு காணப்பட்டது.
மக்கள் நீதிமன்றத்தில் ஜெயங்கொண்டம் வழக்கறிஞர்களும் மற்றும் ஏராளமான வழக்காடிகளும் கலந்துகொண்டு வழக்குகளை சமரச முறையில் நடைபெற முழு ஒத்துழைப்பு கொடுத்தனர் . சிவில் வழக்கு, செக் கேஸ், விபத்து வழக்குகளில் சரியான இழப்பீடுகளையும் , சமரசமாகமுடிக்கப்பட்டது .வழக்காடிகள் தங்கள் பிரச்சனைகளுக்கு உரிய சமரசத் தீர்வு பெறுவதால் வாழ்வின் சிக்கல்களும் மன சிக்கல்களும் தீர்க்கப்படுகின்றது என்பது உண்மையானது . மக்கள் நீதிமன்றத்திற்கான அனைத்து ஏற்பாடுகளையும் வட்ட சட்ட பணிகள் குழுவின் முதுநிலை நிர்வாக உதவியாளர் புனிதா மற்றும் சட்ட தன்னார்வலர்களும் இணைந்து செய்திருந்தனர்.