காஞ்சிபுரம் மாவட்டத்தில் ரூ.78.68 கோடி புயல் நிவாரண நிதி

வெள்ளத்தால் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு 135 நியாய விலை கடைகள் மூலமாக 1,31,149 குடும்ப அட்டைதார்களுக்கு ரூ.78,68,94,000/- நிவாரணம் வழங்கப்படவுள்ளது.

Update: 2023-12-18 00:55 GMT

ஆட்சியர் ஆய்வு 

இந்த கிங் செய்தியை ஆடியோவாக கேட்க…

காஞ்சிபுரம் மாவட்டத்தில் ஒன்றாம் தேதி முதல் வடகிழக்கு பருவமழை மற்றும் மிக்ஜம் புயல் காரணமாக மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் கன மழை பெய்தது. இதில் குறிப்பாக குன்றத்தூர் வட்டம் முழுவதும் ஸ்ரீபெரும்புதூர் வட்டத்தில் மூன்று கிராமங்களிலும் பெரும் பாதிப்பு ஏற்பட்டது.

இதனைத் தொடர்ந்து தமிழக முதல்வர் பாதிக்கப்பட்ட அனைத்து குடும்பங்களுக்கும் ரூபாய் 6000 நிவாரண நிதியாக வழங்கப்படும் என அறிவித்து அதற்கான பகுதிகள் குறித்து அரசாணை வெளியிடப்பட்டது. அவ்வகையில், காஞ்சிபுரம் மாவட்டத்தில் மிக்ஜம் புயல் காரணமாக ஏற்பட்ட மழை வெள்ளத்தால் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு 135 நியாய விலை கடைகள் மூலமாக 1,31,149 குடும்ப அட்டைதார்களுக்கு ரூ.78,68,94,000/- நிவாரணம் வழங்கப்படவுள்ளது .

முன்னதாக நியாய விலை கடை நடத்தும் கூட்டுறவு சங்களுக்கு பணம் அனுப்பிட ஏதுவாக காஞ்சிபுரம் மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கியின், ஸ்ரீபெரும்புதூர் கிளையிலிருந்து வளர்புரம், மாத்தூர் நகர கூட்டுறவு கடன் சங்களுக்கு மற்றும் மணிமங்கலம், படப்பை தொடக்க வேளாண்மை கூட்டுறவு கூட்டுறவு கடன் சங்கங்களுக்கு காவல் துறை பாதுகாப்புடன் அனுப்பி வைக்கப்பட்டது. இதனை ஆட்சியர் கலைச்செல்வி ஆய்வு மேற்கொண்டார். இந்நிகழ்வில் மாவட்ட வருவாய் அலுவலர் வெங்கடேஷ். கூட்டுறவுதுறை மண்டல இணை பதிவாளர் ஜெயஸ்ரீ , திருப்பெரும்புதூர் வருவாய் கோட்டாட்சியர் சரவணக்கண்ணன் மற்றும் அரசு அலுவலர்கள் உடன் இருந்தனர்.

Tags:    

Similar News