தென்காசி மாவட்டத்தில் 79 பேர் கைது
தென்காசி மாவட்டத்தில் சட்டவிரோத மது விற்பனையில் ஈடுபட்ட 79 பேரை கைது செய்த போலீசார் அவர்களிடமிருந்து 611 மது பாட்டில்களை பறிமுதல் செய்தனர்.
Update: 2024-07-02 02:14 GMT
தென்காசி மாவட்டம் தென்காசி மாவட்ட எஸ்.பி அலுவலகம் செய்தி குறிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது. அதில் சட்ட விரோதமாக விற்பனையை தடுக்கும் பொருட்டு மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சுரேஷ்குமார் உத்தரவின் பேரில் மாவட்ட முழுவதும் போலீசார் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது சட்டவிரோதமாக மதுபாட்டில்களை விற்பனை செய்த 79 நபர்கள் கைது செய்யப்பட்டு அவர்களிடம் இருந்து 611 மது பாட்டில்களை பறிமுதல் செய்தனர். இது குறித்து போலீசார் அவர்கள் மீது வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.