ஏழாவது தேசிய சித்த மருத்துவ தின விழா
ஓமியோபதி துறையின் சார்பில் நடைபெற்ற ஏழாவது தேசிய சித்த மருத்துவ தின விழாவில் ஏராளமான மக்கள் கலந்து கொண்டனர்
விருதுநகர் டிவிஎஸ் பள்ளியில் இந்திய மருத்துவ மற்றும் ஓமியோபதி துறையின் ஏழாவது தேசிய சித்த மருத்துவ தின விழா நடைபெற்றது காளையாா் கரிசல்குளம் சித்த மருத்துவ அலுவலர் பெரியசாமி தலைமை தாங்கினார். அருப்புக்கோட்டை மாவட்ட தலைமை மருத்துவமனை சித்த மருத்துவ அலுவலர் தருமராஜன் முன்னிலை வகித்தார்.
காரியாபட்டி அரசு மருத்துவமனை சித்த மருத்துவர் மாமல்லன் வரவேற்புரை வழங்கினார்.விழாவில் கே.வி.எஸ் மேனேஜிங் போர்டு தலைவர் கார்த்திகேயன், செயலாளர் முரளிதரன் சிறப்பு விருந்தினர்களாக கலந்து கொண்டனர். நாகலாபுரம் செந்தில் முருகன், விருதுநகர் கே வி எஸ் பள்ளி தமிழாசிரியர் நாகராஜன் சிறப்புரை ஆற்றினர்.
நூற்றுக்கும் மேற்பட்ட மூலிகைகள், மூலிகை மருந்து பொருட்கள், பாரம்பரிய அரிசி வகைகள், சித்தமருத்துவத்தில் கூறப்பட்ட பாரம்பரிய உணவு வகைகள் இவைகளின் கண்காட்சி நடைபெற்றது . சிறப்பு சித்த மருத்துவ முகாம் நடைபெற்றது மாவட்டத்தில் உள்ள சித்த மருத்துவர்கள் , மருந்தாளுநர்கள் மருத்துவமனை பணியாளர்கள் பங்கேற்றனர் . ஏராளமான பொதுமக்கள் சித்த மருத்துவ கணகாட்சியை பாா்வையிட்டும் சித்த மருத்துவ முகாமில் மருத்துவ சிகிச்சை மேற்கொண்டும் பயன்பெற்றனர். யோகா மருத்துவர் சிவகுமார் இயற்கை உணவு வழங்கினார்.