8 ஆண்டுகள் தலைமறைவாக இருந்த பிடியாணை குற்றவாளி கைது

திண்டுக்கல்லில் திருட்டு வழக்கில் 8 ஆண்டுகள் தலைமறைவாக இருந்த பிடியாணை குற்றவாளி கைது;

Update: 2025-06-27 02:42 GMT
திண்டுக்கல்லில் கடந்த 2017 ஆம் ஆண்டு திருட்டு சம்பவத்தில் ஈடுபட்ட நத்தம் பகுதியை சேர்ந்த பாலாஜி(30) என்பவரை நகர் தெற்கு போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர். இதனைத் தொடர்ந்து பாலாஜி நீதிமன்ற பினை பெற்று வெளியே சென்று வழக்கு விசாரணையை தாமதப்படுத்த வேண்டும் என்ற நோக்கத்துடன் நீதிமன்றத்தில் ஆஜராகாமல் இருந்ததால் திண்டுக்கல் நீதிமன்றம் பிடியானை பிறப்பித்தது. இதுதொடர்பாக நகர் DSP.கார்த்திக் மேற்பார்வையில் நகர் தெற்கு காவல் நிலைய ஆய்வாளர் ராஜசேகர் தலைமையில் சார்பு ஆய்வாளர் சித்திக் மற்றும் காவலர்கள் தீவிர விசாரணை மேற்கொண்டு நத்தம் பகுதியில் பதுங்கி இருந்த பாலாஜியை கைது செய்து நீதிமன்ற காவலுக்கு உட்படுத்தி நீதிமன்ற பிடியானையை நிறைவேற்றினர்.

Similar News