8 மாத கர்ப்பிணி சிறுமிக்கு மருத்துவமனையில் சிகிச்சை - கணவர் தலைமறைவு

பெரம்பலூர் அரசு மருத்துவமனையில் 8 மாத கர்பத்துடன் 15 வயது சிறுமி சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்ட நிலையில் அவரது கணவரை போலீசார் தேடி வருகின்றனர்.

Update: 2024-06-02 04:45 GMT

அரசு மருத்துவமனை 

பெரம்பலூர் மாவட்டத்தில் அரசு மருத்துவமனை ஒன்றில் நேற்று காலை 8 மாதம் கர்ப்பமான 15 வயதுடைய சிறுமி ஒருவர் உள்நோ யாளியாக சிகிச்சைக்கு சேர்ந்தார். சிறுமி 8 மாத கர்ப்பம் ஆனது குறித்து போலீசார் விசாரணை நடத்தினர். அந்த சிறுமியை 25 வயதுடைய அவரது அத்தை மகன் காதலித்து வீட்டை விட்டு அழைத்து சென்று கோவிலில் வைத்து திருமணம் செய்து கொண்டார். இது தொடர்பாக சிறுமியின் பெற்றோர் புகார் ஏதும் அளிக்கவில்லை.

இந்நிலையில் சிறுமி 8 மாதம் கர்ப்பமாகி தற்போது அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு உள்நோயாளி யாக சிகிச்சை பெற்று வருகிறார். ஆனால் சிறுமியை திருமணம் செய்தவர் தலைமறைவாகி இருப்பதாக விசாரணையில் தெரியவந்ததாக போலீசார் தெரிவித்தனர். மேலும் இது தொடர்பாக போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி அந்த வாலி பரை வலைவீசி தேடி வருகின்றனர்.

Tags:    

Similar News