விதிமுறைகளை மீறிய வாகன ஓட்டிகளுக்கு 8.18 லட்சம் அபராதம்

அரூர் சுற்றுவட்டார பகுதிகளில் விதிமுறைகளை மீறி இயக்கப்பட்ட வாகன ஓட்டிகளுக்கு அபராதம் விதித்த மோட்டார் வாகன அலுவலர்கள்.

Update: 2024-04-07 12:44 GMT

மோட்டார் வாகன அலுவலகம் 

தர்மபுரி மாவட்டம் அரூர் சட்டமன்ற தொகுதி அரூர் மோட்டார் வாகன ஆய்வாளர் குலோத்துங்கன் மற்றும் அலுவலர்கள் அரூர் பைபாஸ் சாலை, கோபிநாதம்பட்டி கூட்ரோடு, சாமியாபுரம் கூட்ரோடு, மஞ்சவாடி கணவாய் ஆகிய இடங்களில் வாகன தணிக்கையில் ஈடுபட்டார். கடந்த ஒரு மாதத்தில் 303 வாகனங்கள் தணிக்கை செய்யப்பட்டது. அப்போது விதிமுறைகளை மீறி சரக்கு வாகனத்தில் ஆட்கள் ஏற்றி வந்தது, அதிக பாரம் ஏற்றியது, அதிக ஒலி எழுப்பும் வாகனங்கள் உள்ளிட்ட 99 வாகனங்களுக்கு ரூபாய் .8.18 லட்சம் அபராதம் விதிக்கப்பட்டது. மேலும் முறையான ஆவணம் இல்லாத 15 வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. மோட்டார் வாகன ஆய்வாளர் கூறுகையில், வாகனம் ஓட்டும் போது செல்போன் பயன்படுத்த கூடாது, கட்டாயம் தலைக் கவசம் அணிந்து வாகனம் ஓட்ட வேண்டும். வாகனத்தின் முன், பின்புறத்தில் பம்பர் இருந்தால் அவற்றை அகற்ற வேண்டும் என தெரிவித்தார்.
Tags:    

Similar News