தஞ்சாவூர் மாவட்டத்தில் 89.07 விழுக்காடு தேர்ச்சி

தஞ்சாவூர் மாவட்டத்தில் பிளஸ் 1 பொதுத் தேர்வில் 89.07 விழுக்காடு மாணவர்கள் தேர்ச்சி பெற்றுள்ளனர்.

Update: 2024-05-15 10:01 GMT

தஞ்சாவூர் மாவட்டத்தில் பிளஸ் 1 பொதுத் தேர்வில் 89.07 விழுக்காடு மாணவர்கள் தேர்ச்சி பெற்றுள்ளனர்.


பிளஸ் 1 பொதுத் தேர்வில் தஞ்சாவூர் மாவட்டத்தில் 89.07 விழுக்காடு மாணவ, மாணவிகள் தேர்ச்சி பெற்றனர். தஞ்சாவூர் மாவட்டத்தில் 12 ஆயிரத்து 815 மாணவர்களும், 14 ஆயிரத்து 542 மாணவிகளும் என மொத்தம் 27 ஆயிரத்து 357 பேர் தேர்வு எழுதினர். இவர்களில் 10 ஆயிரத்து 684 மாணவர்களும், 13 ஆயிரத்து 683 மாணவிகளும் என மொத்தம் 24 ஆயிரத்து 367 பேர் தேர்ச்சி பெற்றனர். தேர்ச்சி விகிதம் 89.07 விழுக்காடு ஆகும். இது, கடந்த ஆண்டை விட நிகழாண்டு 1.02 விழுக்காடு குறைவு.  இதேபோல, மாநில அளவிலான தேர்ச்சி விகித பட்டியலில் தஞ்சாவூர் மாவட்டம் கடந்த ஆண்டு 23 ஆவது இடத்தில் இருந்த நிலையில், நிகழாண்டு 27 ஆம் இடத்துக்கு சரிந்துள்ளது. நிகழாண்டில் மாணவர்கள் 83.37 விழுக்காட்டினரும், மாணவிகள் 94.09 விழுக்காட்டினரும் தேர்ச்சி அடைந்தனர். வழக்கம்போல மாணவர்களை விட மாணவிகள் கூடுதலாக தேர்ச்சி பெற்றுள்ளனர்.

அறிவியல் பிரிவில் 93.73 விழுக்காடு தேர்ச்சி: மாவட்டத்தில் அறிவியல் பிரிவில் 93.73 விழுக்காட்டினரும், வணிகவியல் பிரிவில் 82.88 விழுக்காட்டினரும், கலைப் பிரிவில் 64.32 விழுக்காட்டினரும் தேர்ச்சி பெற்றனர். அரசு பள்ளிகளில் 83.35 விழுக்காடு தேர்ச்சி: சுயநிதி மெட்ரிகுலேஷன் பள்ளிகளில் 97.04 விழுக்காட்டிரும், பள்ளிக் கல்வித் துறையின் கீழ் இயங்கும் சுய நிதிப் பள்ளிகளில் 96.18 விழுக்காட்டினரும், அரசு பகுதி உதவி பெறும் பள்ளிகளில் 95.09 விழுக்காட்டினரும்,  சமூக நலப் பள்ளிகளில் 90.32 விழுக்காட்டினரும்,  ஆதிதிராவிடர் நலப் பள்ளிகளில் 87.84 விழுக்காட்டினரும்,  அரசின் முழு உதவி பெறும் பள்ளிகளில் 86  விழுக்காட்டினரும்,  அரசுப் பள்ளிகளில் 83.35  விழுக்காட்டினரும்,  மாநகராட்சிப் பள்ளிகளில் 80.85 விழுக்காட்டினரும் தேர்ச்சி பெற்றனர்.

Tags:    

Similar News