ஊராட்சித் தலைவர் உட்பட 9 பேர் ராஜினாமா !
திண்டுக்கல் மாவட்டம் ரெட்டியார்சத்திரம் ஒன்றியத்துக்கு உட்பட்ட தருமத்துப்பட்டி ஊராட்சி மன்ற தலைவர், துணைத் தலைவர் உள்ளிட்ட ஒன்பது உறுப்பினர்கள் கூண்டோடு ராஜினாமா செய்தனர்.
By : King 24x7 Angel
Update: 2024-03-16 10:09 GMT
திண்டுக்கல் ஊராட்சித் தலைவர் உட்பட 9 பேர் ராஜினாமா செய்தனர். திண்டுக்கல் மாவட்டம் ரெட்டியார்சத்திரம் ஒன்றியத்துக்கு உட்பட்ட தருமத்துப்பட்டி ஊராட்சி மன்ற தலைவர், துணைத் தலைவர் உள்ளிட்ட ஒன்பது உறுப்பினர்கள் கூண்டோடு ராஜினாமா செய்தனர் .தங்களது ராஜினாமா கடிதத்தை வட்டார வளர்ச்சி அலுவலர் மலரவனிடம் அளித்தனர். இதனால் பரபரப்பு ஏற்பட்டது.இது குறித்து ராஜினாமா செய்தவர்கள் கூறியதாவது:அரசு பல திட்டங்களை சொல்லுகிறது ஆனால் நிதி ஆதாரம் இல்லாமல் திணறுகிறது. மக்களிடம் கொடுத்த வாக்குறுதிகளை நாங்கள் நிறைவேற்ற முடியவில்லை. மக்கள் எங்கள் மீது வெறுப்பாக உள்ளனர். உயர் அதிகாரிகள் முறையிட்டும் எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. இவ்வாறு அவர்கள் கூறினர்.