94 வருட பழமையான பள்ளி கட்டிடத்தை திடீர் ஆய்வு மேற்கொண்ட கல்வி அமைச்சர்

Update: 2024-09-30 12:38 GMT

94 வருட பழமையான பள்ளி கட்டிடத்தை திடீர் ஆய்வு மேற்கொண்ட கல்வி அமைச்சர்

இந்த கிங் செய்தியை ஆடியோவாக கேட்க…

திருத்தணி டாக்டர் ராதாகிருஷ்ணன் அரசினர் ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில். காலாண்டு தேர்வு விடுமுறையில் உள்ள பள்ளியில் 94 வருட பழமையான கட்டடத்தை திடீர் ஆய்வு மேற்கொண்டார் கட்டடத்தை புதுப்பிக்க அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார் பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் அன்பில் மகேஷ்....




 


திருவள்ளூர் மாவட்டம் திருத்தணி நகராட்சியில் காந்தி சாலையில் உள்ளது டாக்டர் ராதாகிருஷ்ணன் அரசினர் ஆண்கள் மேல்நிலைப்பள்ளி. இந்த பள்ளி ஆறாம் வகுப்பு முதல் பன்னிரண்டாம் வகுப்பு வரை செயல்படுகிறது

இந்த பள்ளியில் தெலுங்கு பாடமும் எடுக்கப்பட்டு வருகிறது

இந்த பள்ளியில் தற்போது காலாண்டு விடுமுறை நடைமுறையில் உள்ளதால் பள்ளி மூடப்பட்டுள்ளது

இந்தப் பள்ளியில் திடீரென்று மூன்று கார்களில் வந்து இறங்கிய பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ்

இந்த பள்ளியில் உள்ள 94 வருடம் பழமையான கட்டடத்தை வெளிப்புறத்தில் பத்து நிமிடத்தில் நடந்து சென்று ஆய்வு செய்து

இந்த கட்டிடத்தை புதுப்பிக்க அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார்

இந்த கட்டடம் தற்போது பயன்பாட்டில் இல்லாமல் மூன்று வருடமாக இருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது

மேலும் இந்த பள்ளியில் உள்ள டாக்டர் ராதாகிருஷ்ணன் அவரது முழு உருவ சிலைக்கு மாலை அணிவிப்பதற்காக

அந்தப் பள்ளியில் காலாண்டு விடுமுறை பேப்பர் திருத்தும் பணியில் இருந்த ஆசிரியர்கள் மற்றும் மாவட்ட கல்வித்துறை அதிகாரிகள் அலுவலகத்தில் இருந்தவர்களை ஆகியோர்களை அந்த பள்ளியில் அலுவலகத்தில் இருந்தவர்களை அழைத்துக் கொண்டு

டாக்டர் ராதாகிருஷ்ணன் சிலைக்கு மாலை அணிவித்தார் பள்ளி கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ்

திடீரென்று ஆய்வுக்கு இந்தப் பள்ளியில் செல்வதற்கு, திருவள்ளூர் மாவட்ட ஆட்சியருக்கும், சட்டமன்ற உறுப்பினருக்கும், மாவட்ட கல்வித்துறை அதிகாரிகளுக்கும், பள்ளியின் தலைமை ஆசிரியருக்கும் யாருக்கும் தெரிவிக்காமல் இந்த திடீர் ஆய்வில் அமைச்சர் அன்பில் மகேஷ் ஈடுபட்டு 15 நிமிடத்தில் ஆய்வை முடித்துக் கொண்டு மின்னல் வேகத்தில் காரில் ஏறி பறந்து போனார்

செய்தியாளர்கள் கேட்ட கேள்விக்கும் எதற்கும் பதில் கூறாமல் காரில் ஏறி சென்னையை நோக்கி மூன்று காருடன் பறந்து விட்டார்.....

Tags:    

Similar News