விருதுநகர் மாவட்டத்தில் 94.5 பேருந்துகள் இயக்கம்

விருதுநகர் மாவட்டத்தில் இன்று 94.5 சதவீத பேருந்துகள் இயக்கப்பட்டிருப்பதாக போக்குவரத்து கழகம் தகவல் தெரிவித்துள்ளது.

Update: 2024-01-09 13:14 GMT
பேருந்து இயக்கம் 
தமிழகம் முழுவதும் இன்று ஆறு அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி, போக்குவரத்து துறை ஊழியர்கள் வேலை நிறுத்த போராட்டத்தை துவங்கியுள்ளனர். கால வரையற்ற இந்த வேலை நிறுத்த போராட்டம் இன்று நடைமுறைக்கு வந்த நிலையில் நகரின் பல்வேறு பகுதிகளில் பேருந்து நிறுத்தம் மேற்கொள்ளப்பட்டது. அதன் காரணமாக பயணிகள் அவதி அடைந்த நிலையில் விருதுநகர் மாவட்டத்தில் உள்ள ஒன்பது பணிமனைகளில் சுமார் 418 பேருந்துகள் இயக்கப்பட்டு வந்த நிலையில் இன்று 395 பேருந்துகள் வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபடாத ஊழியர்கள் மற்றும் தற்காலிக ஊழியர்கள் கொண்டு இயக்கப்பட்டது. அதன் காரணமாக விருதுநகர் மாவட்டத்தில் இன்று ஒரே நாளில் 94.5 சதவீத பேருந்துகள் இயக்கப்பட்டு உள்ளன.
Tags:    

Similar News