ப்ளஸ் -2 தேர்வில் சேலம் மாவட்ட அளவில் 94.60 சதவீதம் பேர் தேர்ச்சி
ப்ளஸ் -2 தேர்வில் சேலம் மாவட்ட அளவில் 94.60 சதவீதம் பேர் தேர்ச்சி பெற்று அசத்தி உள்ளனர்.
Update: 2024-05-06 14:01 GMT
சேலம் மாவட்டத்தில் 16 ஆயிரத்து 52 மாணவர்கள், 18 ஆயிரத்து 856 மாணவிகள் என மொத்தம் 34 ஆயிரத்து 908 பேர் பிளஸ் டூ தேர்வு எழுதி இருந்தனர். இவர்களில் மாணவர்கள் 14,824 பேரும், மாணவிகள் 18,198 பேரும், மொத்தம் 33,022 பேரும் தேர்ச்சி அடைந்துள்ளனர். இதில் 159 அரசு பள்ளிகளில் இருந்து மாணவ மாணவிகள் தேர்வு எழுதினர். இதில் 91.97 சதவிகிதம் பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர். சேலம் மாவட்ட அளவில் பிளஸ் 2 தேர்வில் 94.60 சதவீதம் பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர். +2 தேர்வு முடிவுகள் வெளியானதும் சேலத்தில் உள்ள அனைத்து பள்ளிகளிலும் தேர்ச்சி பெற்ற மாணவ மாணவிகளின் பட்டியல் ஒட்டப்பட்டது . இதனை திரளான மாணவர்கள் வந்து பார்த்து சென்றனர். பிளஸ்-2 தேர்ச்சி குறித்து மாணவர்கள் சிலர் கூறும்போது பிளஸ் 2 தேர்வு எளிதாக இருந்தது. தற்போது இந்த தேர்வில் வெற்றி பெற்றிருக்கிறோம். மேற்கொண்டு கல்லூரியில் சேர்ந்து படித்து எங்கள் லட்சியத்தை அடைவோம் இவ்வாறு மாணவர்கள் தெரிவித்தனர்.