போச்சம்பள்ளி அருகே மின்சாரம் தாக்கி 17 வயது பள்ளி மாணவன் பலி
போச்சம்பள்ளி அருகே மின்சாரம் தாக்கி 17 வயது பள்ளி மாணவன் பலி;
Update: 2024-07-08 06:16 GMT
பலி
போச்சம்பள்ளி அருகே மின்சாரம் தாக்கி 17 வயது பள்ளி மாணவன் பலி : உடலை மீட்ட போச்சம்பள்ளி போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர் கிருஷ்ணகிரி மாவட்டம் போச்சம்பள்ளி அடுத்த பாரண்டப்பள்ளி ஊராட்சி காட்டு வென்றஹள்ளி கிராமத்தைச் சேர்ந்த லட்சுமணன் என்பவரது மகன் ஆனந்த் 17 வயதான இவர் போச்சம்பள்ளி அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில் பன்னிரண்டாம் வகுப்பு படித்து வருகிறார். இந் நிலையில் அதே பகுதியைச் சேர்ந்த அறிவழகன் என்பவருக்கு சொந்தமான தென்னந்தோப்பில் ஆனந்த் சென்று கொண்டிருந்தபோது அங்கு தாழ்வாக சென்ற மின் கம்பி ஆனந்தின் கழுத்து பகுதியின் மீது உரசி விபத்து ஏற்பட்டது. இந்த மின் விபத்தில் ஆனந்த் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக துடிதுடித்து உயிரிழந்தார். இது குறித்து தகவல் அறிந்து அங்கு வந்த போச்சம்பள்ளி போலீசார் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக கிருஷ்ணகிரி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர் மேலும் இது குறித்து வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.