ரசாயன பொடியை தூவி 6 பவுன் நகை கொள்ளை

நத்தம் அருகே வீட்டில் தனியாக இருந்த பெண்ணிடம் ரசாயன பொடியை தூவி 6 பவுன் நகை கொள்ளை அடிக்கப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Update: 2024-03-14 16:03 GMT

கொள்ளை போன வீடு

திண்டுக்கல் மாவட்டம், நத்தம் அருகே சேர்வீடு பிரிவு பகுதியில் அழகு ராஜா என்பவரது வீடு உள்ளது. இவர் சரக்கு வாகனம் வைத்து விசேஷங்களுக்கு சாமியானா பந்தல் அமைக்கும் பணி செய்து வருகிறார். இவரது மனைவி சுமதி (36). இவர் புதன்கிழமை வீட்டில் தனியாக இருந்துள்ளார்.

அப்போது அவரிடம் குடிக்க தண்ணீர் கேட்பது போல் சென்றவர் திடீரென கத்தியைக் காட்டி மிரட்டி ரசாயன பொடியைத் தூவி அவரது 6 பவுன் தங்க நகைகளை கொள்ளையடித்து சென்று விட்டார். பின்னர் மயக்கம் தெளிந்தவுடன் விவரத்தை தனது கணவரிடம் கூறியுள்ளார்.

உடன் அவரது கணவர் கொடுத்த புகாரின் பேரில் நத்தம் போலீஸார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். பட்டப்பகலில் நடந்த இந்த சம்பவத்தால் அப்பகுதி பரபரப்பாக உள்ளது.

Tags:    

Similar News