பாதிரியாரை இடமாற்றம் செய்யக் கோரி சர்ச் அருகே பேனர்
தூத்துக்குடியில் பாதிரியாரை இடமாற்றம் செய்ய வலியுறுத்தி பரி.பேட்டரிக் ஆலயம் முன்பு பேனர் வைக்கப்பட்டுள்ளதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. ;
By : King 24X7 News (B)
Update: 2024-02-24 11:07 GMT
சர்ச் அருகே வைக்கப்பட்டுள்ள பேனர்
தூத்துக்குடி நாசரேத் திருமண்டலத்திற்கு சொந்தமான பரி.பேட்டரிக் தேவாலயத்தில் கூட்டம் நடத்துவது தொடர்பாக இரு பிரிவினர் இடையே கடந்த 16ம் தேதி மோதல் வாக்குவாதம் ஏற்பட்டு போலீசார் சமரசம் செய்து அனுப்பி வைத்தனர்.
இந்நிலையில், தற்போது, பரி.பேட்டரிக் தேவாலயம் முன்பு பாலியல் புகாரில் சிக்கிய பாதிரியார் செல்வின் துரையை பணியிட மாற்றம் செய்ய வேண்டி 25ம் தேதி கவன ஈர்ப்பு ஜெபக் கூடுகை நடைபெற உள்ளதாக பேனர் வைக்கப்பட்டுள்ளது.