சமூக பொருளாதார நிலை பற்றிய அடிப்படை கணக்கெடுப்பு
விருதுநகர் மாவட்டத்தில் சமூக பொருளாதார நிலை பற்றிய அடிப்படை கணக்கெடுப்பு நடைபெற உள்ளது;
By : King 24X7 News (B)
Update: 2024-03-11 16:24 GMT
மாவட்ட ஆட்சியர்
தமிழ்நாடு அரசு உத்தரவின்படி, ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறையின் சார்பில் மாவட்டத்தில் உள்ள புதிரை வண்ணார் சமூகத்தினரின் கல்வி, சமூக பொருளாதார நிலை பற்றிய அடிப்படை கணக்கெடுப்பு நடத்தி மென்பொருள் உருவாக்குதல் மற்றும் கணக்கெடுப்பு நடத்துவதற்கு இப்சோஸ் நிறுவனம் தேர்வு செய்யப்பட்டுள்ளது.
எனவே இப்சோஸ் நிறுவனமானது விருதுநகர் மாவட்டத்தில் உள்ள கிராமங்களில் உள்ள புதிரை வண்ணார் மக்களின் கல்வி, சமூக பொருளாதார நிலை பற்றிய அடிப்படை கணக்கெடுப்பு நடத்தும்பொழுது முழு ஒத்துழைப்பு நல்குமாறு மாவட்ட ஆட்சித்தலைவர் ஜெயசீலன் கேட்டுக்கொண்டுள்ளார்.