மரக்கிளை முறிந்து விழுந்ததால் உடைந்த கம்பம்
தென்றல் நகரில் மரக்கிளை முறிந்து விழுந்ததால் கம்பம் உடைந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.;
Update: 2024-06-23 10:45 GMT
மரக்கிளை முறிந்து விழுந்ததால் உடைந்த கம்பம்
வேலூர் மாவட்ட எஸ்பி அலுவலகம் அருகே உள்ள தென்றல் நகரில் 100-க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். வேலூரில் கடந்த சில நாட்களாக பெய்த மழையின் காரணமாக எஸ்பி அலுவலக வளாகத்தில் நின்று கொண்டிருந்த மரக்கிளை முறிந்து தென்றல்நகர் தெருவில் உள்ள மின்கம்பம் மீது விழுந்தது. இதில் அந்த மின்கம்பம் 2 துண்டாக உடைந்தது. அதனால் அந்த பகுதியில் மின்சாரம் துண்டிக்கப்பட்டது. மரக்கிளை மற்றும் உடைந்த மின்கம்பம், வயர்கள் சாலையில் கிடந்தன.இதனைக்கண்ட பொதுமக்கள் உடனடியாக மின்வாரிய ஊழியர்களுக்கு தகவல் தெரிவித்தனர். அதன்பேரில் அவர்கள் அங்கு சென்று மரக்கிளையை அங்கிருந்து அப்புறப்படுத்தினர். பின்னர் அந்த பகுதிக்கு மின்வினியோகம் செய்வதற்கான பணியில் ஊழியர்கள் ஈடுபட்டனர். சிறிதுநேரத்துக்கு பின்னர் தென்றல்நகர் பகுதியில் மின்வினியோகம் செய்யப்பட்டது.