குஜிலியம்பாறை அருகே நடந்து சென்ற மூதாட்டி மீது மோதிய சரக்கு வாகனம்
குஜிலியம்பாறை அருகே ஞாயிற்றுக்கிழமை சாலையில் நடந்து சென்ற மூதாட்டி சரக்கு வாகனம் மோதி உயிரிழந்தாா்.;
By : King 24X7 News (B)
Update: 2024-05-20 09:20 GMT
கோப்பு படம்
திண்டுக்கல் மாவட்டம், குஜிலியம்பாறையை அடுத்த கருங்கல் ஊராட்சி சின்னத்தம்பிபட்டியைச் சோ்ந்தவா் அஞ்சலம்மாள் (67). கூலித் தொழிலாளியான இவா், திண்டுக்கல்-கரூா் பிரதான சாலையில் ஞாயிற்றுக்கிழமை நடந்து சென்று கொண்டிருந்தாா்.
அப்போது, பின்னால் வந்த சரக்கு வாகனம் அஞ்சலம்மாள் மீது மோதியது. இதில் பலத்த காயமடைந்த அவா் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தாா்.
விபத்தை ஏற்படுத்திய வடுகம்பாடியை அடுத்த தளிப்பட்டியைச் சோ்ந்த ஓட்டுநா் மணிகண்டன் மீது குஜிலியம்பாறை போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரணை மேற்கொண்டனா்.