நாகர்கோவிலில் மனைவியுடன் சென்ற ஆசிரியரை தாக்கிய 3 பேர் மீது வழக்கு

நாகர்கோவிலில் மனைவியுடன் சென்ற ஆசிரியரை தாக்கிய 3 பேர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.

Update: 2024-04-15 16:40 GMT

கோப்பு படம் 

குமரி மாவட்டம் நாகர்கோவில் அருகே மணிக்கட்டி பொட்டல் பகுதியை சேர்ந்தவர் எட்வின் (52).  இவர் நாகர்கோவில் வடலிவிளை அரசு உயர்நிலைப்பள்ளியில்  ஆசிரியர் வேலை பார்த்து வருகிறார். இவருக்கும் பிள்ளையார்புரத்தை சேர்ந்த தனபால் என்பவருக்கு இடையே சொத்து வாங்குவதில் முன் விரோதம் இருந்து வந்துள்ளது.

எட்வின் தனது மனைவி கவிதா ஜோதியுடன் மோட்டார் சைக்கிளில் நேற்று  இருளப்பபுரம் பகுதியில் சென்று கொண்டிருந்தார். அப்போது தனபால் மற்றும் இரண்டு பேர் எட்வினை தடுத்து நிறுத்தி தகராறு செய்து,  தாக்கியதுடன் அவரது மனைவிக்கும் மிரட்டல் விடுத்தனர். இதில் படுகாயம் அடைந்த எட்வின் சிகிச்சைக்காக ஆஸ்பத்திரியில்  சேர்க்கப்பட்டார். 

 இது குறித்து கோட்டார் போலீசில் புகார் செய்யப்பட்டது. போலீசார்   தனபால், என் ஜி ஓ  காலனியை சேர்ந்த பாபு மற்றும் கண்டால் தெரியும் ஒரு நபர் மீது பெண் கொடுமை சட்டம், கொலை மிரட்டல் உட்பட ஐந்து பிரிவுகளில் வழக்கு பதிவு செய்தனர்.

Tags:    

Similar News