சேலத்தில் வாங்கிய காருக்கு பணம் தர மறுத்தவர் மீது வழக்கு
சேலத்தில் வாங்கிய காருக்கு பணம் தர மறுத்தவர் மீது வழக்கு. போலீசார் நடவடிக்கை.;
Update: 2024-07-15 11:54 GMT
வழக்கு
சேலம் சுப்பராயன் தெருவை சேர்ந்தவர் சந்திரகாந்த் (வயது 33). இவர் சேலம் மாவட்ட குற்றப்பிரிவு போலீசில் ஒரு புகார் கொடுத்து உள்ளார். அதில் தனது பழைய காரை திருப்பூரை சேர்ந்த ஒருவரிடம் ரூ.4 லட்சத்திற்கு விற்றேன். அப்போது அவர் முன் பணமாக ரூ.35 ஆயிரம் கொடுத்தார். அதன் பிறகு பணம் தரவில்லை. காருக்கான பணத்தை கேட்ட போது அவர் தர மறுக்கிறார். எனவே காருக்கான மீதி பணத்தை பெற்றுத்தர நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அந்த புகாரில் அவர் கூறியுள்ளார். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.