கல்குவாரி லாரியில் 300லிட்டர் டீசலை களவாடிய டிரைவர் மீது வழக்கு
அத்திப்பாளையத்தில் கல்குவாரி லாரியில் 300 லிட்டர் டீசலை களவாடிய டிரைவர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.
அத்திப்பாளையத்தில் கல்குவாரி லாரியில் 300 லிட்டர் டீசலை களவாடிய டிரைவர் மீது வழக்கு பதிவு. கரூர் மாவட்டம், க. பரமத்தி காவல் எல்லைக்குட்பட்ட அத்திப்பாளையம் பகுதியில் கிஸ்க்கால் ப்ளூ மெட்டல் லிமிடெட் என்ற நிறுவனம் செயல்பட்டு வருகிறது.
இந்த நிறுவனத்தில் கடந்த ஒரு வருட காலமாக அத்திப்பாளையம் அருகே உள்ள இந்திரா நகரை சேர்ந்த சேகர் வயது 40 என்பவர் லாரி டிரைவராக பணியாற்றி வந்தார். இந்த நிலையில் மே 23ஆம் தேதி இரவு 10 மணியளவில், கிஸ்க்கால் ப்ளூ மெட்டல் நிறுவனத்திற்கு சொந்தமான இரண்டு லாரிகளிலிருந்து சுமார் 300 லிட்டர் டீசலை லாரி டிரைவர் களவாடி உள்ளார்.
இது தொடர்பாக கிஸ்க்கால் ப்ளூ மெட்டல் நிறுவனத்தின் இன்சார்ஜ் அத்திப்பாளையத்தைச் சேர்ந்த உமாவதி வயது 33 என்பவர் க. பரமத்தி காவல் நிலையத்தில் புகார் அளித்தார். மேலும்,இது தொடர்பாக டிரைவர் சேகரையும், அடையாளம் தெரியாத மற்றொரு நபரையும் தாக்கியதால், தலை, கை, வலது மற்றும் இடது கால்களில் காயம்பட்டு, கரூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சைக்காக லாரி டிரைவர் சேகர் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
இது தொடர்பாக சம்பவ இடத்திற்கு சென்று விசாரணை மேற்கொண்ட காவல்துறையினர், நேற்று மாலை சம்பந்தப்பட்ட லாரி டிரைவர் மற்றும் அடையாளம் தெரியாத நபர் மீதும் வழக்கு பதிவு செய்துள்ளனர் க. பரமத்தி காவல்துறையினர்.