பெண்ணுக்கு கொலை மிரட்டல் விடுத்த குடும்பத்தினர் மீது வழக்குப் பதிவு
Update: 2023-12-21 11:31 GMT
கோவை:சிங்காநல்லூர் மார்க்கெட் வீதியை சேர்ந்தவர் ஸ்வேதா(21). இவருக்கு சந்தோஷ் என்பவருடன் காதல் மலர்ந்து கடந்த மூன்று ஆண்டுகளாக இருவரும் காதலித்து வந்துள்ளனர். இவர்களது காதல் விவகாரம் குடும்பத்தினருக்கு தெரியவர இரு வீட்டாரும் பேசி திருமணம் முடிவு செய்த நிலையில் அடிக்கடி சந்தித்து கொண்ட இருவரும் உடலுறவு கொண்டதில் ஸ்வேதா கர்ப்பம் அடைந்துள்ளார்.இதுகுறித்து சந்தோஷிடம் கூறியவர் தன்னை உடனடியாக திருமணம் செய்து கொள்ளும்படி வற்புறுத்திபோது உடனடியாக திருமணம் செய்ய முடியாது என கூறிய சந்தோஷ் கருவை கலைக்கும்படி கூறியுள்ளார்.இதற்கு ஸ்வேதா மறுப்பு தெரிவித்ததுடன் சந்தோஷின் பெற்றோரிடம் முறையிட்ட நிலையில் அவருக்கு ஆதரவாக பேசியதோடு தனக்கு மிரட்டல் விடுத்ததாக ஸ்வேதா அளித்த புகாரின் பேரில் சிங்காநல்லூர் அனைத்து காவல் நிலையத்தில் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.