மறியல் போராட்டத்தில் ஈடுபட்ட அரசு அலுவலர்கள் மீது வழக்கு பதிவு
புதிய ஓய்வூதிய திட்டத்தை ரத்து செய்யக்கோரி மறியல் போராட்டத்தில் ஈடுபட்ட 53 அரசு அலுவலர்கள் மீது சிவகங்கை நகர் போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர்.;
Update: 2023-12-29 07:17 GMT
மறியல்
சிவகங்கை ஆட்சியர் அலுவலகம் முன்பு சிபிஎஸ் ஒழிப்பு இயக்கம் சார்பில் மறியல் போராட்டம் நடைபெற்றது. புதிய ஓய்வூதிய திட்டத்தை ரத்து செய்து பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்த வேண்டும் என்ற கோரிக்கையை வலியுறுத்தி இப்போராட்டம் நடைபெற்றது. சிவகங்கை ஆட்சியர் அலுவலகம் முன்பு கோஷமிட்டபடி மறியலில் ஈடுபட முயன்ற அரசு ஊழியர், ஆசிரியர்கள் அனைவரையும் போலீசார் கைது செய்தனர். இந்நிலையில் அனுமதியின்றி போராட்டத்தில் ஈடுபட்டதாக 53 பேர் மீது சிவகங்கை நகர் போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர்