சவுடு மண் அள்ளியவர் மீது வழக்குப்பதிவு
ராமநாதபுரம் பரமக்குடி அருகே ஆயிரம் யூனிட் சவுடு மண் திருடியவர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.
பரமக்குடியில் ஆயிரம் யூனிட் சவுடு மண் திருடியவர் மீது வழக்கு பதிந்து போலீசார் விசாரணை செய்து வருகின்றனர். ராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடி அருகே பொட்டிதட்டி, மஞ்சூர், உள்ளிட்ட பகுதிகளில் அதிக அளவில் செங்கல் சூளைகள் உள்ளது.
தமிழக அரசின் நிபந்தனைகளை பின்பற்றி சவுடு மண் அனுமதி பெற்று அள்ளப்பட்டு செங்கல் தயாரிப்பில் ஈடுபட்டு வருகின்றனர். பரமக்குடி அருகே பொட்டிதட்டி கிராமத்தில் லிங்கேஸ்வரன் என்ற சேம்பரில் அளவுக்கு அதிகமாக சவுடு மண் கொட்டி வைக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில் உரப்புளி கிராம விஏஓ சதீஷ் குமார் விசாரணை செய்துள்ளார். இதில் உரிய அனுமதியின்றி சேம்பர் உரிமையாளர் மோகன்தாஸ் அவரது சொந்த நிலத்தில் உரிய அனுமதியின்றி ஆயிரம் யூனிட் சவுடு மண் திருடப்பட்டு இருப்பது தெரிய வந்தது.
இதனை அடுத்து உரப்புளி கிராம விஏஓ சதீஷ்குமார் புகாரின் பேரில் பரமக்குடியை சேர்ந்த மோகன்தாஸ் மீது பரமக்குடி தாலுகா போலீசார் வழக்குப் பதிந்து விசாரணை செய்து வருகின்றனர். தலைமறைவாக உள்ள மோகன்தாஸை பரமக்குடி தாலுகா போலீசார் தேடி வருகின்றனர்.