காவலரை வெட்டிய இருவர் மீது வழக்கு பதிவு
சிவகங்கையில் காவலருக்கு வாளால் வெட்டு - மருத்துவமனையில் அனுமதி.;
Update: 2024-04-15 05:43 GMT
மருத்துவமனையில் அனுமதி
சிவகங்கை ஆரியபவன் நகரில் வசித்து வரும் ராஜேஷ்கண்ணன்(36). இவா் சிவகங்கை ஆயுதப்படையில் முதல்நிலைக் காவலராகப் பணிபுரிந்து வருகிறாா். ராஜேஷ்கண்ணன் வீட்டில் இருந்த போது, வீடு புகுந்த வீரவலசையை சோ்ந்த சேதுபதி, சமயத்துரை ஆகியோா் ராஜேஷ்கண்ணனை வாளால் தாக்கிவிட்டு தப்பினா். இதில் பலத்த காயமடைந்த ராஜேஷ்கண்ணன் சிவகங்கை அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டாா். இதுகுறித்த புகாரின்பேரில், சிவகங்கை நகா் போலீஸாா் வழக்குப் பதிவுசெய்து சேதுபதி, சமயத்துரை ஆகிய இருவரைத் தேடி வருகின்றனா்.