குடிபோதையில் மருத்துவமனையில் ரகளை செய்த வாலிபர் மீது வழக்கு !

பாலக்கோடு அரசு மருத்துவமனையில் குடிபோதையில் ரகளை செய்த வாலிபர் மீது வழக்கு பதிவு செய்துள்ளனர்.;

Update: 2024-07-05 10:23 GMT
குடிபோதையில் மருத்துவமனையில் ரகளை செய்த வாலிபர் மீது வழக்கு !

வழக்கு

  • whatsapp icon
தர்மபுரி மாவட்டம், பாலக்கோடு சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட பாலக்கோடு அரசு மருத்துவமனை தலைமை மருத்துவர் பாலசுப்பிரமணியன், பாலக்கோடு காவல் நிலையத்தில் புகார் ஒன்றை அளித்துள்ளார். அதில், சூடப்பட்டி பகுதியைச் சேர்ந்த நாகராஜ் என்பவர், மருத்துவமனையில் உள்நோயா ளியாக அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தார். அவரை பார்ப்பதற்காக உறவினர் என கூறிக்கொண்டு, செல்வகுமார் என்பவர் வந்தார். குடிபோதையில் இருந்த அவர், மருத்துவமனையில் ரகளையில் ஈடு பட்டதோடு செவிலியர்களிடம் தகராறு செய்து, ஜன்னல் கண்ணாடியை உடைத்துள்ளார். எனவே, அவர் மீது நடவடிக்கை எடுக்கவேண்டும் என தெரிவித்துள்ளார். இதன்பேரில், காவலர்கள் வழக்குப்பதிந்து விசாரித்து வருகின்றனர்.
Tags:    

Similar News