சாலை ஆக்கிரமிப்பை அகற்ற வந்த அரசு அதிகாரிகயை தடுத்த பெண்மீது வழக்கு
மயிலாடுதுறை அருகே சாலை ஆக்கிரமிப்பை அகற்ற வந்த அரசு அதிகாரிகளை தடுத்த பெண்மீது வழக்கு செய்தனர்
மயிலாடுறை அருகே குத்தாலம் பகுதியில் நெடுஞ்சாலைத்துறையினரால் சாலை விரிவாக்கம் செய்யப்பட்டுவருகிறது. மயிலாடுதுறை நெடுஞ்சாலைத்துறை உதவிக் கோட்டப் பொறியாளர் நர்மதா மற்றும் குத்தாலம் போலீசார் இணைந்து சேத்திரபாலபுரம் முதல் குத்தாலம்வரை சாலை விரிவாக்கத்திற்காக சாலையோர ஆக்கிரமிப்புக்களை அகற்றும் பணியில் ஈடுபட்டுவந்தனர். குத்தாலம் காவல்நிலையத்தை அடுத்துள்ள பகுதியில் சாலை விரிவாக்கத்திற்கான அளவிடும் பணியை மேற்கொண்டனர்.
அந்த நேரத்தில் ஆனந்தி என்பவர் மேலும் 3 பேருடன் சேர்ந்து அரசு அதிகாரிகள் அளவிடும் பணியை தடுத்து வீட்டை தாழ்ப்பாள் போட்டு தகராறில் ஈடுபட்டுள்ளார், பெண்போலீசார் மற்றும் நெடுஞ்சாலைத்துறை உதவிக் கோட்டப் பொறியாளரைப் பணி செய்யவிடாமல் தடுத்தும் அதிகாரிகளைத் தள்ளிவிட்டும் மிரட்டல் விடுத்துள்ளனர். இதுகுறித்து நெடுஞ்சாலைத்துறை அதிகாரி நர்மதா குத்தாலம் காவல் நிலையத்தில் அளித்த புகாரின்பேரில் ஆனந்தி மற்றும் 3பேர் மீது வழக்குப் பதிவுசெய்யப்பட்டு தேடிவருகின்றனர்.