அரசு பஸ் கண்ணாடி உடைத்தவர் மீது வழக்கு
அரசு பஸ் கண்ணாடி உடைத்தவர் மீது போலீசார் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனர்.
Update: 2024-04-25 09:03 GMT
சின்னசேலம் அருகே அரசு பஸ் கண்ணாடியை உடைத்தவர் மீது போலீசார் வழக்குப் பதிந்தனர். சின்னசேலம் அடுத்த பாக்கம்பாடி கிராமத்தை சேர்ந்தவர் அன்பழகன் மகன் ரகுநாத்,28; சின்னசேலம் அரசு போக்குவரத்து கழக டிரைவர். இவர், நேற்று முன்தினம் தடம் எண் 27 ஏ (டி.என் 32 என் 3612) பஸ்சை ஓட்டினார். மாலை 4:45 மணியளவில் நைனார்பாளையத்தில் இருந்து சின்னசேலம் நோக்கி சென்றபோது, அங்கிருந்த டாஸ்மாக் கடை அருகே விளம்பார் கிராமத்தை சேர்ந்த கோவிந்தராசு என்பவர் பஸ்சை மறித்து திட்டி, முன்பக்க கண்ணாடியை கல்லால் உடைத்து சேதப்படுத்தினார். ரகுநாத் அளித்த புகாரின் பேரில், கோவிந்தராசு மீது சின்னசேலம் போலீசார் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனர்.