பெண்ணை தாக்கிய இருவர் மீது வழக்கு

காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்

Update: 2023-12-16 09:15 GMT

பெண்ணை தாக்கிய இருவர் மீது வழக்கு

இந்த கிங் செய்தியை ஆடியோவாக கேட்க…
சின்னசேலம் அடுத்த செல்லியம்பாளையம் கிராமத்தை சேர்ந்தவர் பெரியசாமி மனைவி வசந்தா, 45. இவருக்கும் அதே கிராமத்தை சேர்ந்த முத்துசாமி மகன் சின்னசாமி, 50. இருவருக்கும் நிலப் பிரச்னை சம்மந்தமாக முன்விரோதம் உள்ளது. கடந்த 8ம் தேதி மாலை சின்னசாமி அவரது மாடுகளை, வசந்தா நிலத்தில் ஓட்டி சென்றார். இது குறித்து வசந்தா கேட்டுள்ளார். இதனால் கோபமடைந்த சின்னசாமி மற்றும் அவரது மகன் சதீஷ்குமார் ஆகியோர், வசந்தாவை தாக்கி, கொலை மிரட்டல் விடுத்தனர். வசந்தா அளித்த புகாரின் பேரில், சின்னசாமி, சதீஷ்குமார் மீது சின்னசேலம் போலீசார் வழக்கு பதிந்து விசாரித்து வருகின்றனர்.
Tags:    

Similar News