தடுப்பு சுவரில் கான்கிரீட் கலவை லாரி மோதி விபத்து

திண்டுக்கல்லை அடுத்த முள்ளிப்பாடி அருகே பாலத்தில் உள்ள தடுப்பு சுவரில் கான்கிரீட் கலவை லாரி மோதி நேற்று விபத்துக்குள்ளானது.

Update: 2024-03-10 16:05 GMT

 லாரி மோதி விபத்து

திண்டுக்கல்-திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் திண்டுக்கல்லை அடுத்த முள்ளிப்பாடி அருகே பாலத்தில் உள்ள தடுப்பு சுவரில் கான்கிரீட் கலவை லாரி மோதி நேற்று விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் முன்சக்கரங்கள் நொறுங்கின. சம்பவ இடத்தில் நெடுஞ்சாலைத்துறை போலீசார் போக்குவரத்து பாதிப்பை சரி செய்தனர். இதுகுறித்து தாலுகா போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
Tags:    

Similar News