போதைப் பழக்கத்தில் இருந்து இளைஞர்களை விடுவிக்க தொடர் ஓட்டம்

போதைப் பழக்கத்தில் இருந்து இளைஞர்களை விடுவிக்க செங்கல்பட்டில் இருந்து தொடர் ஓட்டம் மேற்கொண்ட வீரர் விழுப்புரத்தில் நிறைவு செய்தார்.

Update: 2024-05-23 11:39 GMT

போதைப் பழக்கத்தில் இருந்து இளைஞர்களை விடுவிக்க செங்கல்பட்டில் இருந்து தொடர் ஓட்டம் மேற்கொண்ட வீரர் விழுப்புரத்தில் நிறைவு செய்தார்.


செங்கல்பட்டை சேர்ந்த ஓட்டப்பந்தய வீரரான ரனில்நாத் பொறியியல் பட்டதாரி ஆவார். இவர் போதைப்பழக்கத்தில் இருந்து இளைஞர்களை விடுவிக்க வலியுறுத்தி நேற்று விழிப்பு ணர்வு தொடர் ஓட்டம் மேற்கொண்டார். செங்கல்பட்டு சுங் கச்சாவடி பகுதியில் அதிகாலை 5 மணிக்கு தொடர் ஓட்டத்தை தொடங்கினார். தொடர்ந்து, மேல்மருவத்தூர், ஓங்கூர், திண் டிவனம் வழியாக ஓடி வந்த அவர் நேற்று இரவு 7 மணியளவில் விழுப்புரத்தில் தனது ஓட்டத்தை நிறைவு செய்தார். விழுப்புரம் கலெக்டர் அலுவலக நுழைவுவாயில் அருகில் வருகை தந்த ரனில்நாத்தை மாவட்ட விளையாட்டு அலுவலர் ஜெயக்கு மாரி, விழுப்புரம் கல்வி விளையாட்டு ஆலோசகர் மோகன சுந்தரம் ஆகியோர் பூங்கொத்து கொடுத்து வரவேற்றனர். இதையடுத்து ரனில்நாத், பொதுமக்களிடம் விழிப்புணர்வு துண்டு பிரசுரங்களை வழங்கினார். அதில், வலிமையான இளை ஞர்களே தேசத்தின் வலிமையான தூண்களாக அமைய முடி யும். இதனால் இளைஞர்கள் போதைப் பழக்கத்தில் இருந்து விடுபட வேண்டும். போதைப்பழக்கம் வீட்டிற்கும், நாட்டிற்கும், உடல்நலத்திற்கும் கேடு. போதைப்பழக்கம் மனிதனை அடி மைப்படுத்தும், அவர்கள் குடும்பத்தையும் வீணாக்கி விடும். போதைப்பக்கம் இறுதியில் உயிரை பறித்துவிடும். எனவே இத்தகைய கொடுமையான போதைப் பழக்கத்திலிருந்து இளை ஞர்கள் விடுபட வேண்டும் என விழிப்புணர்வு ஏற்படுத்தினார்.
Tags:    

Similar News