தொடர் காத்திருப்பு போராட்டம்

நாமக்கல் கலெக்டர் அலுவலகத்தில் வருவாய் துறை அலுவலர்கள் இன்று, காலவரையற்ற வேலை நிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.;

Update: 2024-02-27 00:42 GMT

கோரிக்கைகளை வலியுறுத்தி, தமிழ்நாடு வருவாய்த்துறை அலுவலர் சங்கத்தினர், நாமக்கல் ஆட்சியர் அலுவலகத்தில், தொடர் காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர். தமிழ்நாடு வருவாய்த்துறை அலுவலர் சங்கம் சார்பில், பல்வேறு கோரிக்கையை வலியுறுத்தி, நாமக்கல் ஆட்சியர் அலுவலகத்தில் தொடர் காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.

துணை தாசில்தார் பட்டியல் திருத்தத்தின் காரணமாக, பாதிக்கப்பட்டுள்ள பட்டதாரி அல்லாத அலுவலர்களின் பணியிறக்கப் பாதுகாப்பு அரசு உத்தரவை வெளியிட வேண்டும். இளைநிலை வருவாய் ஆய்வாளர், முதுநிலை வருவாய் ஆய்வாளர், பெயர் மாற்ற அரசு உத்தரவு அடிப்படையில், விதி திருத்த அரசு உத்தரவை வெளியிட வேண்டும். வருவாய் மற்றும் பேரிடர் மேலாண் துறை அலுவலர்களின் பணித்தன்மையை கருத்தில் கொண்டு, அனைத்து நிலை அலுவலர்களுக்கும், மேம்பாடுத்தப்பட்ட ஊதியம், தனி ஊதியம் வழங்க வேண்டும். வருவாய் மற்றும் பேரிடர் மேலாண் துறையில் 3 ஆண்டுகளுக்கு மேலாக காலியாக உள்ள அலுவலக உதவியாளர் பணியிடங்களை நிரப்ப வேண்டும். அனைத்து தாலுகாவிலும் சான்றிதழ் வழங்கும் பணிக்கு என, புதிய துணை தாசில்தார் பணியிடங்களை ஏற்படுத்த வேண்டும், என்பவை உள்ளிட்ட, 10 அம்ச கோரிக்கையை வலியுறுத்தி, தமிழகம் முழுவதும், வருவாய்த்துறை அலுவலர்கள் 3 கட்ட போராட்டங்களை அறிவித்துள்ளனர்.

Advertisement

அதன்படி, ஒட்டுமொத்த தற்செயல் விடுப்பு எடுத்து மாவட்ட தலைநகரில் உண்ணாவிரத போராட்டம், கடந்த, 22ம் தேதி முதல் அனைத்து பணிகளையும் புறக்கணித்து, ஆட்சியர் அலுவலக வாயிலில் தொடர் காத்திருப்பு போராட்டம் நடைபெற்றது. இந்த நிலையில் இன்று  (பிப். 27) முதல், காலவரையற்ற வேலை நிறுத்தப் போராட்டத்தில் ஈடுபடுகிின்றனர்.. நாமக்கல் மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில், 5ம் நாளாக காத்திருப்பு போராட்டம் நேற்று நடந்தது. சங்க மாவட்ட செயலாளர் விஜயகாந்த் தலைமை வகித்தார்.

பொருளாளர் பிரகாஷ் வரவேற்றார். துணைத்தலைவர் மணிகண்டன், மாநில செயற்குழு உறுப்பினர் ராணி ஆகியோர் முன்னிலை வகித்தனர். வருவாய் துறை அலுவலர் சங்க நிர்வாகிகள், உறுப்பினர்கள் உள்பட ஏராளமனோர் போராட்டத்தில் கலந்து கொண்டனர். 

Tags:    

Similar News