பவானிசாகர் அருகே சிறுத்தை தாக்கி மாடு பலி
பவானிசாகர் அருகே சிறுத்தை தாக்கி கன்றுக்குட்டி இறந்ததையடுத்து 3 இடங்களில் கூண்டு வைத்து சிறுத்தையை பிடிக்க வனத்துறையினர் முடிவு செய்துள்ளனர்.
பவானிசாகர் அருகே கோடேபாளை யத்தை சேர்ந்தவர் சிவராஜ். விவசாயி. இவர் கால்நடைகளை வீட்டை ஒட்டி கட்டி வைப்பது வழக்கம் நேற்று அதிகாலை 4.30 மணிஅளவில் வீட்டிற்கு வெளியே வந்த சிவராஜ் கன்றுக்குட்டி காணாது கண்டு அதிர்ச்சி அடைந்தார். அப்போது வீட்டுக்கு 100 மீட்டர் தூரத்தில் இருந்த புதரில் கன்றுக்குட்டி இறந்து கிடந்தது தெரியவந்தது.
தகவல் அறிந்து வந்த பவானிசாகர் விளாமுண்டி வனத்துறை ரேஞ்சர் கணேஷ்பாண்டியன் தலைமையில் ஊழியர்கள் ஆய்வு செய்தனர். இதில் சிறுத்தை வந்ததை உறுதிபடுத்தினார் இதனையடுத்துஅப்பகுதியில் கேமராக்கள் பொருத்த கண்காணிக்க முடிவு செய்தனர். இதையடுத்து வனத்துறையினர் கேமராக்களை பொருத்தினர். கண்காணிப்பு கேமராவில் சிறுத்தைநடமாட்டம் தென்பட்டால் அந்த இடத்தை தேர்வு செய்து அங்கு கூண்டு அமைத்து சிறுத்தை பிடிக்கும் பணிகள் மேற்கொள்ளப்படும் என விளாமுண்டி வனத்துறையினர் தெரிவித்தனர்.
இதனிடையே கன்றுக்குட்டி இறந்ததற்கு விவசாயிக்கு நஷ்டஈடு தரவேண்டும் என்று அப்பகுதி விவ சாயிகள் ஒட்டு மொத்தமாக குரல் கொடுத்தனர். முதலில் நஷ்ட ஈடுதரஇயலாது என்று வனத்துறையினர் கூறினர்.இதனால் விவசாயிகள் கன்றுக்குட்டி உடலை எடுத்து சென்று பவானிசாகர்- பு.புளியம்பட்டி நால்ரோட்டில் வைத்து சாலை மறியல் செய்வோம் என அறிவித்தனர்.