கபடியை காண வந்தவர்களுக்கு நடன விருந்து
பாளையங்கோட்டையில் நடந்த கபடி போட்டியில் நடைபெற்ற பெண்களின் கண்கவர் நடனம் பார்வையாளர்களை வெகுவாக ஈர்த்தது.;
Update: 2024-01-17 04:03 GMT
நடனம்
நெல்லை மாவட்டம் பாளையங்கோட்டை என்ஜிஓ காலனியில் ஜி.ஓ நினைவுக்கோப்பை மின்னொளி கபடி போட்டி கடந்த இரண்டு நாட்களாக நடைபெற்று வருகின்றது. இந்த போட்டியில் இரண்டாவது நாளாக நேற்று இரவு நடைபெற்ற போட்டிக்கு முன்னதாக பெண்களின் கண்கவர் நடன நிகழ்ச்சி நடைபெற்றது. இந்த நடன விருந்தை கபடியை காண வந்த ரசிகர்கள் கண்டு மகிழ்ந்தனர்.